ரஜினி முதல்ல இத செய்யட்டும்...! வாயடைக்க வைத்த தமிழக அமைச்சர்...!

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 02:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
ரஜினி முதல்ல இத செய்யட்டும்...! வாயடைக்க வைத்த தமிழக அமைச்சர்...!

சுருக்கம்

RAJINI is the B.E graduate to say that the system is not right

ரஜினி முதலில் கர்நாடக சென்று காவிரி நீர் பிரச்சனையை சரி செய்யட்டும் எனவும் சிஸ்டம் சரியில்லை என கூறுவதற்கு அவர் என்ன பி.இ பட்டதாரியா எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என அனைத்து மக்களையும் நீண்ட வருடங்களாக எதிர்ப்பார்ப்பில் வைத்திருந்த நடிகர் ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். 

அப்போது பேசிய அவர் சிஸ்டம் சரியில்லை எனவும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் எனவும் பேசினார். 

இதையடுத்து உடனக்குடன் செயல்பாட்டில் குதித்த ரஜினி ரசிகர்கள் மூலம் இணையதளம், சின்னம் என தேர்வு செய்து அதிரடி கிளப்பினார். 

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி, அரசியல் தெரியாதவர்கள்தான் அவசரப்படுவார்கள் எனவும் எனக்கு நன்கு அரசியல் தெரிந்ததால் தான் நிதானமாக முடிவெடுக்கிறேன் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் சிஸ்டம் சரியில்லை என்றால் இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அதாவது, ரஜினி முதலில் கர்நாடக சென்று காவிரி நீர் பிரச்சனையை சரி செய்யட்டும் எனவும் சிஸ்டம் சரியில்லை என கூறுவதற்கு அவர் என்ன பி.இ பட்டதாரியா எனவும் கேள்வி எழுப்பினார். 

மேலும் தமிழகத்தில் மதசார்புள்ள அரசு அமைய வேண்டும் என ரஜினி சொல்கிறாரா எனவும் அவர் ஆன்மீக அரசியலை பார்க்கட்டும் நாங்கள் அண்ணா வழி அரசியலை பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்டார். 

PREV
click me!

Recommended Stories

முதலில் தெளிவாக பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ்.. என்ன விஷயம்?
ஜெட் வேகத்தில் பலமாகும் பாஜக..! இடிந்து விழும் கம்யூனிஸ்ட் கோட்டை.. பீதியில் காங்கிரஸ்..!