அரசியல் கட்சி தொடக்கமா..? அமைதி காக்கும் ரஜினி.. குழம்பி போயிருக்கும் ரசிகர்கள்..!

Published : Oct 04, 2019, 11:25 AM IST
அரசியல் கட்சி தொடக்கமா..? அமைதி காக்கும் ரஜினி.. குழம்பி போயிருக்கும் ரசிகர்கள்..!

சுருக்கம்

டிசம்பரில் அரசியல் கட்சி தொடங்கப்படுமா என்கிற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தனது ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அவர் கட்சி தொடங்கவில்லை. தனது பட வேலைகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

ஆனால் அடிமட்ட அளவில் இருந்து தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை அவர் செய்து வருவதாகவும் விரைவில் அரசியல் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும் ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பிய அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டிசம்பரில் அரசியல் கட்சி தொடங்குவீர்களா என்கிற கேள்வி நடிகர் ரஜினி காந்த் பதிலளிக்க மறுத்து அமைதியாக சென்று விட்டார்.

மேலும் தர்பார் படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டநிருபர்களிடம் படம் மிக நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார்.

விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ரஜினி இன்னமும் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!