என்ன ரஜினி, டிராமாவை முடிக்கிறீங்களா இல்ல தொடரப்போறீங்களா?: சூப்பரை கிழி கிழின்னு கிழித்த ஸ்டாலின்..!

By Vishnu PriyaFirst Published Feb 8, 2020, 11:13 AM IST
Highlights

அரசியல் சாசனபிரிவு 9ன் படி யாருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது! என உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயு சொல்லியிருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா! உங்களின் பசப்பு நாடகத்தை முடிக்கப்போகிறீர்களா அல்லது தொடரப் போகிறீர்களா ரஜினி!? - மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    இலங்கை சுதந்திர தினத்தில் வழக்கமாக இசைக்கப்பட்டு வந்த தமிழில் தேசிய கீதம் இந்தாண்டு இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. பிரதமர் மோடி உணர்வுபூர்வமாக இந்த பிரச்னையில் தலையிட்டு, இலங்கை தூதரை அழைத்து இதற்காக கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும். 
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    முஸ்லிம் மக்களுக்காக நடிகர் ரஜினி குரல் கொடுப்பது நல்ல விஷயம். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து ரஜினி இப்போதுதான் பேசுகிறார். அ.தி.மு.க. ஏற்கனவே அந்த நிலைப்பாட்டில்தான் உள்ளது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி படம் எப்போதுமே ஓடாது. அது போல தி.மு.க. டிரைலர் மட்டுமே காட்டும். படம் ஓடாது. 
-    ஜெயக்குமார் (தமிழக அமைச்சர்)

*    தன் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு திருமணத்தை நடத்தி வைட்த்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், திருமணம் முடிந்ததும் மணமக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து வாங்கினார். இந்த கையெழுத்து இயக்கத்துக்கான நோக்கத்தையும் மணமக்களிடம் விளக்கினர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவரும். 

-    பத்திரிக்கை செய்தி

*    மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிக்ளின் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக தற்போது தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. இது தற்காலிக பின்வாங்குதல் என்றே தோண்றுகிறது. 
-    திருமாவளவன் (சிதம்பரம் எம்.பி.)

*    ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது நல்லதல்ல, அந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்! இல்லையெனில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்! என அறிவித்தேன். இதை ஏற்று, அந்த பொதுத்தேர்வு முடிவை ரத்து செய்து, பழைய முறை தேர்வே நடத்தப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி. 

-    ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)
*    இந்தியாவிலேயே தமிழக மாணவர்களுக்குதான் நுண்ணறிவுத்திறன் அளவு அதிகமாக உள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து போராடும். 
-    கே.ஏ.செங்கோட்டையன் (தமிழக அமைச்சர்)

*    குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் சிறுபான்மை மக்களை தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தின் மூலம் தூண்டிவிடுகின்றன. நாட்டில் பதற்றமான நிலையை உருவாக்கியுள்ளனர். தங்களின் போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் போக்கை உருவாக்கியுள்ளனர். 
-    சீனிவாசன் (பா.ஜ.க. மாநில செயலாளர்)

*    பா.ஜ.க. அரசு, விவசாயிகளின் நலனின் அக்கறை கொண்டுள்ளதாக பட்ஜெட்டில் கூறியுள்ளது. ஆனால் உத்திரபிரதேச மாநிலம் பந்தல்கண்டில் விவசாயி தற்கொலை செய்துள்ளார். இது மத்தியரசின் உண்மை முகத்தை, நிலைப்பாட்டை வெளிச்சமிட்டு காட்டுகிறது. விவசாயிகளின் தற்கொலை குறித்து ஒரு போதும் கவலைப்படாத அரசு இது. 
-    பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுசெயலாளர்)

*    பழங்குடி இன சிறுவர்களை என் பேரன்கள் போல நினைத்தேன். அந்த அடிப்படையில்தான் அவர்களை அழைத்து என் காலணிகளை கழற்றிவிட சொன்னேன். இது தவிர வேறேந்த உள்நோக்கமும் எனக்கு அவர்களிடம் கிடையாது. இதுதான் உண்மை.
-    திண்டுக்கல் சீனிவாசன் (வனத்துறை அமைச்சர்)

*    அரசியல் சாசனபிரிவு 9ன் படி யாருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது! என உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயு சொல்லியிருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா! உங்களின் பசப்பு நாடகத்தை முடிக்கப்போகிறீர்களா அல்லது தொடரப் போகிறீர்களா ரஜினி!?
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

click me!