தலைவரின் அறிவிப்புக்கு ஏற்ற மாதிரி அலர்ட்டா இருப்போம்... அறிக்கையே விட்ட வேலூர் ரசிகர்கள்!

Published : Apr 27, 2019, 02:06 PM IST
தலைவரின் அறிவிப்புக்கு ஏற்ற மாதிரி அலர்ட்டா இருப்போம்... அறிக்கையே விட்ட வேலூர் ரசிகர்கள்!

சுருக்கம்

எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்,   அரசியல் மாற்றத்திற்கும் துணை நின்று தலைவரின் வெற்றியை உறுதியாக்குவோம்.  

அரசியலுக்கு வருவதாய் அறிவித்து ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கிய நடிகர் ரஜினிகாந்த், மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். 

தேர்தலுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும், சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன்பாக பேசிய ரஜினியின் சகோதரர் ரஜினி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

ரஜினி இவ்வாறு கூறியிருக்கும் நிலையில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி இன்று  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்ற தலைவரின் அறிவிப்புக்கு ஏற்றவாறு இதுவரை நம் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாக நடைபெற்றுவந்த அரசியல் கட்டமைப்புப் பணிகளை தொடர்ந்து செய்து, விடுபட்ட வேலைகளை முடிக்க வேண்டும். 

மேலும், தலைவர் சந்திக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும், அவர் நிகழ்த்தப்போகும் அரசியல் மாற்றத்திற்கும் துணை நின்று தலைவரின் வெற்றியை உறுதியாக்குவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?