ஒரு விஷயத்தில் ஏமாந்து விட்டேன்... மீண்டும் ரசிகர்களை குழப்பும் ரஜினி..!

Published : Mar 05, 2020, 01:14 PM IST
ஒரு விஷயத்தில் ஏமாந்து விட்டேன்... மீண்டும் ரசிகர்களை குழப்பும் ரஜினி..!

சுருக்கம்

கட்சி தொடங்குவது குறித்து ஒரு விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்குவது குறித்து ஒரு விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினி தலைமையில் நடைபெற்றது. அதன்பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை. கட்சி தொடங்குவதில் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் தான். 

தனிப்பட்ட ஏமாற்றம். அதுபற்றி பின்னர் சொல்கிறேன். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது பற்றி காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.  கட்சி துவங்குவது குறித்து மாவட்ட செயலாளர்கள் என்னிடம் நிறைய கேள்வி கேட்டனர். அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் நான் பதில் அளித்துள்ளேன். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்தது குறித்து நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை.  

சி.ஏ.ஏ விவகாரத்தில் மோடி- அமித்ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்புகளிடம் கூறினேன். மோடி அமித் ஷாவுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த நான் முடிந்தவரை உதவிகரமாக இருப்பேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!