கருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால்! அழகிரிதான் திமுகவின் தலைவர்.. குண்டு போடும் ராஜேந்திர பாலாஜி

Published : May 06, 2019, 08:55 PM IST
கருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால்! அழகிரிதான் திமுகவின் தலைவர்.. குண்டு போடும்  ராஜேந்திர பாலாஜி

சுருக்கம்

கருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால் ஸ்டாலினுக்கு பதில் அழகிரி திமுக தலைவராகியிருப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குண்டு தூக்கிப் போட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ஸ்டாலின் ஜனாதிபதி ஆவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் மே 23-ஆம் தேதியுடன் ஆட்சி கவிழும் என திமுகவினரை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.

அண்ணன் எடப்பாடியார் ஆட்சியை கவிழ்க்க எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொண்டு சதி செய்கின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் மறைமுகமாக 40 திமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என ஷாக் கொடுத்த அவர். 

கருணாநிதிக்கு அமெரிக்காவில் பேச்சு பயிற்சி கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்திருந்தால் ஸ்டாலினை நீக்கிவிட்டு திமுக தலைவராக  அழகிரியை தலைவராக்கியிருப்பார் என குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார்.

கருணாநிதிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்ல ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து நாளுக்கு நாள் குண்டைத் தூக்கிப் போடுவது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!