இக்கட்டான இந்த நேரத்தில் வாக்குவங்கி தான் உங்களுக்கு முக்கியமா? கேரள அமைச்சரை கிழித்து தொங்கவிட்ட ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. !!

By Selvanayagam PFirst Published Feb 27, 2019, 9:13 PM IST
Highlights

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளக் கூடிய ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கும்போது, அதனை கொச்சைப் படுத்தி பேசிய கேரள அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஸ் – இ – முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அதிகாலை இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த கேரள அமைச்சரும், அம்மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளருமான கொடியேறி பாலகிருஷ்ணன்,  நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடியாமல் பாஜக  திணறி வருகிறது. இந்த பாகிஸ்தானுடனான மோதலை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது என்றும் , இதை காரணமாக வைத்து நாடாளுமன்றத் தேர்தலை தள்ளி வைக்க பாஜக முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

கொடியேறியின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு  இந்தியாவில் உள்ள ஆண்கள்,  பெண்கள், குழந்தைகள்  என அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் வாக்கு வங்கியை குறி வைத்து அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்னணன் போல் அறிவில்லாமல் பேசக் கூடாது என்றும் கடுமையான அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ள அவர், இது தேசத்தைக் காப்பதற்கான நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.

அவரது மற்றொரு டுவிட்டரில் , பலவீனமான அரசியல் வன்முறைக்கு தலைமை தாங்கும் சாகசங்கள் நிறைந்த பலரை பார்ப்பதாகவும், கபில்சிபல் போன்ற அரசியல்வாதிகள் கொடியேறி பாலகிருஷ்ணன் போல் பேசக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகையவர்களை நாம் புறம் தள்ள வேண்டும் என்றும் ராஜீவ் சந்திரசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்,

click me!