ராஜஸ்தான் அரசியல்: காங்கிரஸ், பாஜக ரிசார்ட் அரசியல்..! கெலாட் முதல்வர் பதவி தப்புமா.?

By T BalamurukanFirst Published Aug 8, 2020, 8:49 PM IST
Highlights

"மழை விட்டாலும் தூவானம் விடவில்லை" என்கிற அடைமொழிக்கு ஏற்ப ராஜஸ்தான் அரசியலில் அவ்வப்போது முதல்வர் நாற்காலிக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. அங்கே அசோக்கெலாட் முதல்வராக இருக்கிறார். துணை முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பில் இருந்தவருமான சச்சின்பைலட் 18 எம்எல்ஏக்களுடன் வேறு மாநிலத்து ரிசார்ட்க்கு பறந்தார்.இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் 6பேரும் தற்போது குஜராத் ரிசார்ட்க்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அசோக் கெலாட் தனது பங்களாவில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திய பிறகு தனக்கு மெஜாரிட்டி இருப்பதாகவும் சச்சின் பாஜகவின் சொல்படி பதவி ஆசைக்காக சென்று விட்டார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. டெல்லிக்கு சென்று சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்திக்க சச்சின் பைலட் சென்ற போது அவர்கள் யாரும் இவரை பார்க்க மறுத்துவிட்டார்கள். அதன் பிறகு துணை முதல்வர் பதவியும், கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. 

காங்கிரசும், பாஜகவும் இருவரும் ஒருவருக்கொருவர் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாட முயற்சிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று குஜராத்தின் போர்பந்தருக்கு சிறப்பு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.
இது அரசியல் நிர்ப்பந்தத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கருதப்பட்டாலும், எம்.எல்.ஏ ஒருவர் குஜராத்திற்கு சோமநாதர் கோவிலுக்கு வருகை தந்ததாகக் கூறினார். மேலும் அசோக் கெலாட் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தங்களை துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தானில் ஏராளமான அரசியல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மை இல்லை மற்றும் பாஜக எம்எல்ஏக்களை அரசு மனரீதியாக துன்புறுத்துகிறது. இந்த சூழ்நிலையில், எங்கள் 6 எம்எல்ஏக்கள் சோமநாதர் கோவிலுக்கு வருகை தருவதற்காக இங்கு வந்துள்ளனர்.” என்று எம்.எல்.ஏ நிர்மல் குமாவத் கூறினார்.

மாயவதி கட்சியை சேர்ந்த 6எம்எல்ஏக்கள் காங்கிரஸ்க்கு ஆதரவாக மாறிவிட்டதாகவும் எங்கள் கட்சி எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாற்றிவிட்டார்கள் .இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கட்சி தாவலில் ஈடுபபட்ட எம்எல்க்கள் மீது தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

click me!