அரசியலமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், நான் போராட்டத்தில் இறங்குவேன். என்னைப் பொறுத்தவரை இந்திய ஒற்றுமை பயணம் என்பது ஒரு தொடக்கம்தான். - கமல்ஹாசன்.
வருகின்ற 2024ம் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போது இருந்தே பணிகளை முடக்கிவிட்டுள்ளது பாஜகவும், காங்கிரஸ் கட்சியும். அதன்படி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைப்பயணத்தை நடத்தி வருகிறார்.
மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காண்பிக்கும் வகையில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கிய அவர் காஷ்மீர்வரை செல்லவிருக்கிறார். 150 நாள்களில் கிட்டத்தட்ட 3,570 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!
இந்தப் பயணமானது தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலங்கானா மகாராஷ்டிரா வழியாக தற்போது ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொண்டார். பின்னர் செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பது அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கூறினார்கள். ஆனால் எனது மனசாட்சியை கேட்டு பயணத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். அரசியலமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், நான் போராட்டத்தில் இறங்குவேன்.
என்னைப் பொறுத்தவரை இந்திய ஒற்றுமை பயணம் என்பது ஒரு தொடக்கம்தான்.தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது இரண்டு கொள்ளுப் பேரன்கள் சேர்ந்து நடத்தும் யாத்திரை. ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப் பேரன். நான் காந்தியின் கொள்ளுப் பேரன். மாற்று கொள்கையில் இருந்தாலும் தேச ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்றுள்ளேன்.
நான் முதலில் ஆங்கிலத்தில்தான் பேசுவதாக இருந்தேன். ஆனால் சகோதரர் கேட்டுக்கொண்டதால் தமிழிலும் பேசுகிறேன். நான் இங்கு வருவதற்கு முன்னால் பல பேர் என்னை நீங்கள் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதால் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளக் கூடாது. அது உங்களுடைய அரசியல் வாழ்க்கையைப் பாழ்படுத்தும் என்று அறிவுரை வழங்கினர். என்னுடைய அரசியல் வாழ்க்கை என்பது என்னுடைய நாட்டுக்குரியது எனக்கானது அல்ல என்று பேசினார்.
இதையும் படிங்க.. வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!