குடியரசுத் தலைவர் உரையின்போது ராகுல் காந்தி என்ன செய்தார் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Jun 20, 2019, 10:55 PM IST
Highlights

நாடாளுமன்ற  கூட்டுக்கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது, அதில் கவனம் செலுத்தாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல், மொபைல் போனில் மூழ்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 

நாடாளுமன்ற  கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், குடியரசுத் தலைவர்  உரையில் கவனம் செலுத்தவில்லை. 

மாறாக, தனது மொபைல்போனை எடுத்து, அதில் கவனம் செலுத்தினார். சுமார் 24 நிமிடங்கள், மொபைல் போனை பார்த்து கொண்டிருந்த அவர், அதில், ஏதோ டைப் செய்தார். தொடர்ந்து, மொபைல் போனில் படம் பிடித்த ராகுல், 20 நிமிடங்கள் தனது தாயார் சோனியாவுடன் பேசி கொண்டிருந்தார். குடியரசுத் தலைவர்  உரைக்கு எம்.பி.,க்கள் வரவேற்பு தெரிவித்து மேஜையை தட்டினர். சோனியாவும் மேஜையை தட்டினார். ஆனால், ராகுல் அதனை கண்டுகொள்ளவில்லை.

ராம்நாத் கோவிந்த்  உரையில், சர்ஜிக்கல் தாக்குதல், பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் குறித்து குறிப்பிட்டார். அப்போது, சோனியா உள்ளிட்ட அனைத்து எம்.பி.,க்களும் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இதற்கு மாறாக, ராகுல் தரையை பார்த்து கொண்டிருந்தார். இடை இடையே, ராகுலை சோனியா கவனித்து கொண்டிருந்தார். ராகுல், அமைதியாக அமர்ந்திருந்தார். ராகுலின் இந்த செயல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

click me!