கருணாநிதியை சந்தித்து உடல் நலம்  விசாரித்த சரத்குமார், ராதிகா..!

Asianet News Tamil  
Published : Nov 12, 2017, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
கருணாநிதியை சந்தித்து உடல் நலம்  விசாரித்த சரத்குமார், ராதிகா..!

சுருக்கம்

radhika and sarathkumar meet karunanidhi

நடிப்பு, சீரியல் தயாரிப்பு என பல பணி களில் பிஸியாக இருந்தாலும், அவ்வப் போது அரசியல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என தெரிவித்து வருகின்றனர் நடிகை ராதிகா மற்றும் சரத்குமார்.

இந்நிலையில் இன்று, நடிகர் சரத்குமார் தன்னுடைய மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்த திடீர் சந்திப்பு குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு எனவும், அரசியல் ரீதியாக நடைபெற வில்லை எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவர்கள் திமுக தலைவரை சந்தித்துள்ளது, பலருக்கும் அதிமுகவில் இருந்து சரத் குமார் திமுகவில் இணைய பாதை போடுகிறார் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத பல மாற்றங்கள் நடைபெற்று வரும் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV
click me!

Recommended Stories

TN Politics 2026: திமுக ஆதரவில் தவெக ஆட்சி? இது உ.பி.க்களின் பெருமிதம் அல்ல! விஜய்யின் 'செக் மேட்' அரசியல்! செம வியூகம்!
TVK Vijay: சுப்ரீம் கோர்ட் போகும் தளபதி விஜய்? TVK-வின் 'பிளான்-B' ரெடி! தமிழ்நாட்டில் மகாராஷ்டிரா சீன் ரிப்பீட் ஆகுமா?