நயன்தாராவை திட்டி... அதிமுகவில் முட்டி... ஆம்பளையாக மாறி பாஜகவில் இணைந்த ராதாரவி..!

By Thiraviaraj RMFirst Published Nov 30, 2019, 5:41 PM IST
Highlights

நீங்கள்லாம் ஆம்பளைகளா எனக் ஆடிட்டர் குருமூர்த்தி கேட்டதால் அதிமுகவில் இருந்த ராதாரவி பாஜகவில் இணைந்து விட்டார் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 


நடிகர் ராதாரவி பா.ஜ.க செயல்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் நடிகர் ராதாரவி. தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த ராதாரவி, கொலையுதிர்காலம் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனால், அடுத்த சில நாட்களில் தான் தி.மு.கவில் இருந்து விலகியதாக அறிவித்தார் ராதாரவி.

பின்னர் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார். அக்கட்சியில் இணைந்து 6 மாதங்களே ஆன நிலையில் இப்போது அந்தக் கட்சிக்கும் குட் பை சொல்லியுள்ளார். இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டுள்ளார் நடிகர் ராதாரவி.

இதற்கு காரணமாக அதிமுகவினரை நீங்கள் எல்லாம் ஆம்பளையா? என குருமூர்த்தி கேட்டதும், கோபப்பட்டு அதிமுகவில் இருக்கப் பிடிக்காமல் ராதாரவி வெளியேறி பாஜகவில் இணைந்து விட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

click me!