ராதாபுரம் மறுஎண்ணிக்கை ரிசல்ட்.... முட்டுகட்டை போடும் உச்சநீதிமன்றம்... அதிர்ச்சியில் திமுக..!

By vinoth kumarFirst Published Oct 25, 2019, 12:36 PM IST
Highlights

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மறுவாக்கு  எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நவம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு மீதான விசாரணையும் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடை நவம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்படுதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, 203 தபால் ஓட்டுகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு அறையில் அக்டோபர் 4-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைக்கோரி எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அக்டோபர் 23-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. நில அபகரிப்பு தொடர்பான வழக்கை விசாரித்ததால் இந்த வழக்கை 23-ம் விசாரிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மறுவாக்கு  எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நவம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு மீதான விசாரணையும் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!