ராதாபுரம் மறுஎண்ணிக்கை ரிசல்ட்.... திமுகவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

Published : Oct 14, 2019, 11:30 AM ISTUpdated : Oct 25, 2019, 12:29 PM IST
ராதாபுரம் மறுஎண்ணிக்கை ரிசல்ட்.... திமுகவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

சுருக்கம்

ராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க கோரி திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், திமுக வேட்பாளர் அப்பாவு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. வழக்கு பட்டியலிட்ட பிறகே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். 

ராதாபுரம் தேர்தல் வழக்கில் அதிமுகவின் இன்பதுரை மனுவை விரைவாக விசாரிக்க கோரிய திமுகவின் அப்பாவு கோரிக்கையை உச்சநீதிமன்றம்  நிராகரித்துள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, 203 தபால் ஓட்டுகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு அறையில் அக்டோபர் 4-ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைக்கோரி எம்.எல்.ஏ. இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மறு ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அக்டோபர் 23-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், ராதாபுரம் தேர்தல் வழக்கை விரைவாக விசாரிக்க கோரி திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், திமுக வேட்பாளர் அப்பாவு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. வழக்கு பட்டியலிட்ட பிறகே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். 

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?