புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை... காலையிலேயே கதிகலங்கும் காங்கிரஸ்...!

Published : May 02, 2021, 08:47 AM IST
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை... காலையிலேயே கதிகலங்கும் காங்கிரஸ்...!

சுருக்கம்

தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.   

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரி, அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அண்ணா அரசு கலைக்கல்லூரி, மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு அரசு மண்டல நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

தற்போது தபால் வாக்கு எண்ணிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!
Astrology: நல்ல காலம் பொறந்தாச்சு.! 6 நட்சத்திரங்களுக்கு இனி அற்புத யோகம்.! தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம்.!