ஆட்சியாளர்கள் இதை உணர்வார்களா? டிடிவி.தினகரன் வைத்த அதிரடி சரவெடி கோரிக்கை..!

By vinoth kumarFirst Published Jun 1, 2021, 4:46 PM IST
Highlights

கடுமையான டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம், காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் லாரி தொழிலின் நிலை, இப்போது இன்னும் மோசமாகி இருக்கிறது அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனாவின் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லாரி தொழிலில் இருப்பவர்களுக்குரிய நிவாரணங்களை மத்திய, மாநில அரசுகள் அளித்திட முன்வர வேண்டும்.

ஏற்கெனவே கடுமையான டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம், காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் லாரி தொழிலின் நிலை, இப்போது இன்னும் மோசமாகி இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இத்தொழிலைக் கவனிக்காமல் விடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்களா?" எனப் பதிவிட்டுள்ளார்.

click me!