எடப்பாடியின் அதிரடி ஆட்டம் !! டோட்டலா சரண்டர் ஆன ஜாக்டோ –ஜியோ !!

By Selvanayagam PFirst Published Jan 30, 2019, 7:07 PM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி எடுத்த சில அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாட்டோ –ஜியோ அமைப்பினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.  கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல் அமைச்சர், எதிர்க்கட்சி  தலைவர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

இந்த நிலையில், பள்ளித்தேர்வுகள் தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு  போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த கூட்டத்தில்  போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திறும்பப்பெற வேண்டும் என்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்ப்ட்டது.

அதே நேரத்தில் எங்களின் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் . பணி மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை என கூறினால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டாலும், அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைதான் என பொது மக்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் மாணவர்களும், பெற்றோரும் பாதிக்கப்பட்டதால் பொது மக்களிடையே அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதே உண்மை.

தமிழக அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் பதறிப்போன அரசு ஊழியர்கள் தற்போது பணிக்கு திரும்ப ஒப்புக் கொண்டுள்ளனர்.

click me!