கூண்டோட கட்சியை கலைச்சிடுவோம்!: அ.தி.மு.க.வை மிரட்டும் உட்கட்சி கலவரம்! உறைந்த இ.பி.எஸ்.

By Vishnu PriyaFirst Published Dec 10, 2019, 6:16 PM IST
Highlights

ஜெயலலிதா இருக்கும் வரை அ.தி.மு.க. என்றால் அவர்தான். சாதாரண கிளைச் செயலாளர் பதவி முதல் அவைத்தலைவர் பதவி வரையில் என கட்சியிலும்! கவுன்சிலர் பதவி முதல் ராஜ்யசபா எம்.பி. பதவி வரையில் என தேர்தலிலும் ஜெயலலிதாவின் முடிவே இறுதியானது. அவர் தேர்வு செய்யும் நபர்கள் அல்லது சசியால் தேர்வு செய்யப்பட்டு தரும் நபர்களே வேட்பாளர்கள் ஆவார்கள். 

ஜெயலலிதா இருக்கும் வரை அ.தி.மு.க. என்றால் அவர்தான். சாதாரண கிளைச் செயலாளர் பதவி முதல் அவைத்தலைவர் பதவி வரையில் என கட்சியிலும்! கவுன்சிலர் பதவி முதல் ராஜ்யசபா எம்.பி. பதவி வரையில் என தேர்தலிலும் ஜெயலலிதாவின் முடிவே இறுதியானது. அவர் தேர்வு செய்யும் நபர்கள் அல்லது சசியால் தேர்வு செய்யப்பட்டு தரும் நபர்களே வேட்பாளர்கள் ஆவார்கள். ஒரு நபரை நிறுத்தினால் தோல்வி உறுதி! என்று உலகத்துக்கே தெரிந்தாலும், ஜெயலிதா அந்த நபரை நிறுத்திவிட்டாலும் கட்சியிலிருந்து மூச்சு சப்தம் கூட எதிர்த்து வராது. 


ஆனால் ஜெ., மறைவுக்குப் பின் கட்சியின் கட்டுப்பாடு, சர்வாதிகாரம், கெத்து என எல்லாமே மாறிவிட்ட நிலையில், தேர்தல் வேட்பாளர்கள் விஷயத்தில்  தலைமை ஒருங்கிணைப்பாளர்களான  இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் வைக்கும் முடிவுகள் மட்டுமே ஏற்கப்படும்! என்று சொல்ல முடியுமா? நிச்சயம் முடியவில்லை. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தங்கள் மாவட்டங்களில், தங்களுக்கு இஷ்டமான நபர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்றால், தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது சகஜமாகி  இருக்கிறது. நடந்து முடிந்த எம்.பி. மற்றும் இடைத்தேர்தல்களுக்கான எம்.எல்.ஏ. தேர்வில் இதை கண்கூட கண்டது கட்சி. 
அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் கழக ஒருங்கிணைப்பாளர்களான இரு முதல்வர்களுக்கும் எதிராக முரண்டு பிடிப்பதை பார்த்துப் பழகிய, கீழ் நிலை நிர்வாகிகள் அதே குணத்தை அமைச்சர்கள், மாவ்வட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் உள்ளாட்சி தேர்தலில் காட்ட துவங்கியுள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிவிட்ட நிலையில், ஒன்றிய மற்றும் நகர அளவில் பதவிகளை வைத்திருக்கும் நிர்வாகிகள் தங்கள் கெத்துக்களை காட்ட துவங்கியுள்ளனர் கட்சிக்குள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி பதவிகள் மாவட்ட செயலாளருக்கு பாதி, அந்தந்த பகுதி எம்.எல்.ஏ.க்களு மீதி என்று பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் தங்களின் ஊராட்சிகளில் தங்களுக்கு வேண்டப்படாத நபர்களுக்கு சீட் கொடுத்தாலோ அல்லது தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு சீட் கொடுக்காமல் போனாலோ, எந்த அச்சமுமின்றி மிக கெத்தாக சண்டை கட்டுகின்றனர் அந்தந்த ஒன்றிய நிர்வாகிகள். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள்  இறங்கி வராத பட்சத்தில் சிம்பிளாக மிரட்டும் தொனியில் பேச துவங்கிவிடுகின்றனர்.  ”இந்த ஊராட்சியில படாதபாடு பட்டு, பணத்தை தண்ணீரா பாய்ச்சி கட்சியை வளர்த்திருக்கேன். என்  விருப்பத்துக்கு எதிரா சீட் கொடுத்தீங்கன்னா, கட்சியை இங்கே கலைச்சுடுவேன். நான் ஒரு வார்த்தை சொன்னா, ஒட்டுமொத்தமா கழக உறுப்பினர்கள் வெளியில வந்துடுவாங்க. எங்களை வெத்தல பாக்கு வெச்சு வரவேற்க ஸ்டாலின் டீம் ரெடியா இருக்குது. எப்படி வசதி?” என்கிறார்களாம் துளி பயமும் இன்றி. 

எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் எவ்வளவு முயன்றும் இந்த நிர்வாகிகளை அடக்கவோ, அவர்களை மீறி முடிவெடுக்கவோ முடியவில்லையாம். மீறி முடிவெடுத்தால் கட்சியை கலைச்சு, தேர்தலில் மண்ணை கவ்வ வைத்துவிடுவார்கள்! என்று பயப்படுகின்றனர். ஊரக நிர்வாகிகளின் இந்த மிரட்டல் விஷயமான எடப்பாடியார் வரைக்கும் போக அவரோ உறைந்து நிற்கிறாராம்.

click me!