பிரியங்காவை வெறுப்பேற்ற முயன்ற பாஜகவினர்.. பதிலுக்கு தரமான சம்பவம் செய்து பிரியங்கா அசத்தல்!

Published : May 15, 2019, 08:31 AM ISTUpdated : May 15, 2019, 08:36 AM IST
பிரியங்காவை வெறுப்பேற்ற முயன்ற பாஜகவினர்.. பதிலுக்கு தரமான சம்பவம் செய்து பிரியங்கா அசத்தல்!

சுருக்கம்

பிரியங்கா தன் காரை நிறுத்தி, அதிலிருந்து கீழே இறங்கிவந்தார். பிரியங்கா இறங்கி வருவதைக் கண்ட பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர். 

மத்திய பிரதேசத்தில் பிரியங்காவை வெறுப்பேற்ற முயன்ற பாஜக தொண்டர்கள் பல்பு வாங்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.


பத்து நாட்களுக்கு முன்பு, மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி கார் சென்றபோது, “ஜெய் ஸ்ரீராம்...” என்று பாஜக தொண்டர்கள் கோஷமிட்டார்கள். இதனால் கோபமடைந்த மம்தா, காரிலிருந்து இறங்கி சத்தம் போட்டார். இதைக் கண்டு கோஷமிட்டவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசும் அளவுக்கு அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்நிலையில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக மத்திய பிரதேசத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வந்தார். இந்தூரில் அவர் காரில் வந்தபோது, “மோடி...மோடி..” என்று பாஜக தொண்டர்கள் கோஷம் போட்டார்கள். 
இதைக் கண்டதும் தன் காரை நிறுத்திய பிரியங்கா, அதிலிருந்து கீழே இறங்கிவந்தார். பிரியங்கா இறங்கி வருவதைக் கண்ட பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர். அவர்கள் அருகே வந்த பிரியங்கா,  அவர்களுடன் கைகுலுக்கினார். மேலும் அவர்களுடன் நட்பாக பேசிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

 
பிரியங்காவை வெறுப்பேற்று முயன்ற பல்பு வாங்கிய பாஜக தொண்டர்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!