"ஆதாரம் முழுக்க முழுக்க பொய்"; மூச்சு விடாமல் பேசும் புகழேந்தி...

First Published Jul 18, 2017, 3:31 PM IST
Highlights
Prison photo is fake


பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா குறித்து வெளியான புகைப்படம் மற்றும் வீடியோ பொய்யானது என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி இன்று சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொது செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் சிறைத்துறை அதிகாரியான ரூபாய் கூறியிருந்தார். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக, சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு வசதிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது குறித்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கர்நாடக சிறைத்துறை அதிகாரியான டிஜிபி சத்யநாராயணா மிகவும் நேர்மையான அதிகாரி. பெங்களூரு சிறை குறித்த சசிகலாவின் புகைப்படம் போலியானது. கிராபிக்ஸ் மூலம் பெங்களூரு சிறை புகைப்படம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வீடியோவும் பொய்யானது.

சிறையில் உள்ள சசிகலாவுக்கு வெளி உணவு தரட்டுமா என கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்து சிறையில் தரும் உணவைத்தான் உட்கொண்டு வருகிறார்.

நாடு முழுவதும் தான் தெரிய வேண்டும் என்பதற்காக சசிகலாவின் பெயரை ரூபா பயன்படுத்தினாரா? கர்நாடகாவில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சி எங்களுக்கு எப்படி உதவு முடியும்?

இவ்வாறு அவர் கூறியிருந்தார்

click me!