Madurai : பொங்கலுக்கு வேஷ்டி கட்டும் பிரதமர்..மதுரையில் பொங்கல் விழா…கலந்து கொள்கிறார் மோடி.. வெளியான அப்டேட்

By Raghupati R  |  First Published Dec 31, 2021, 12:20 PM IST

மதுரையில் ஜனவரி 12-ல் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க கடந்தாண்டு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. 

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது, இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி திறந்து வைக்க தமிழகம்  வருகிறார். மதுரையில் வரும் ஜனவரி 12 ம் தேதி, தமிழக பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவுக்காக பாஜக சார்பில், மாநில அளவில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஏற்கெனவே ஜனவரி 12-ம் தேதி, விருதுநகரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும், அப்போது அவர் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் விழாவில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

click me!