என்னை மீம்ஸ் போடணுமா போடுங்க , உங்க சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்...!! சளைக்காத பிரதமர் கழுவி ஊற்றும் நெட்டீஸன்கள்...!!

Published : Dec 27, 2019, 11:49 AM IST
என்னை மீம்ஸ் போடணுமா போடுங்க , உங்க சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்...!!  சளைக்காத பிரதமர் கழுவி ஊற்றும் நெட்டீஸன்கள்...!!

சுருக்கம்

அதற்குப் பதிலளித்த பிரதமர் உங்கள் மீம்ஸ்களை வரவேற்கிறேன்,  மீம்ஸ் போட்டு மகிழுங்கள் என பதிலளித்திருந்தார்.

தன்னைப்பற்றி மீம்ஸ் வெளியிடுபவர்களுக்கு  மோடி தன்னுடைய பாணியில் அளித்துள்ள பதில்  சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது டுவிட்டரில் மோடியிடம் கருத்து தெரிவித்த ஒருவர்,  உங்கள் படத்தை வைத்து அதிகளவில் மீம்ஸ் செய்யப்படும் என கூறியிருந்தார் ,  அதற்கு பதிலளித்த பிரதமர் உங்களை நான் வரவேற்கிறேன் மகிழ்ச்சியாக இருங்கள் என பதிலளித்துள்ளார். 

இந்த ஆண்டின் சூரிய கிரகணத்தை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அதற்குரிய உபகரணங்களுடன் ஆர்வத்துடன்  கண்டு ரசித்தனர் ,  இந்நிலையில் பிரதமர் மோடியும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை பார்வையிட்டார் ,  அதற்கான புகைப்படங்களும்  சமூகவலைதளத்தில் வெளியானது ,  இந்நிலையில் மோடியின் அந்த புகைப்படங்களை  மேற்கோள் காட்டிய ஒருவர் ,  இப்போது இந்த புகைபடங்களை வைத்து மீம்ஸ் தாயாரிக்கப்படும்  என தெரிவித்தார் .  அதற்குப் பதிலளித்த பிரதமர் உங்கள் மீம்ஸ்களை வரவேற்கிறேன்,  மீம்ஸ் போட்டு மகிழுங்கள் என பதிலளித்திருந்தார்.

அத்துடன்,  மற்ற இந்தியர்களை போலவே  நானும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தேன் என்றும்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .  அதேவேளையில் இங்கு  அதிக மேகமூட்டம் இருந்ததால் சரியாக பார்க்க முடியவில்லை ,  ஆனால் கோழிக்கோடு மற்றும் பிற பகுதியில் காணப்பட்ட சூரிய கிரகணத்தை நேரடியாக ஸ்ட்ரீம் மூலம் பார்த்தேன் அத்துடன் அது குறித்து நிபுணர்கள் ஆலோசனை செய்தேன் என அவர் தெரிவித்திருந்தார் பிரதமரின் இந்த பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.  
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!