மாணவர்களின் கனவில் மண்ணை போட்ட பிரதமர் மோடி.! பொம்மைகள் குறித்து பிரதமர் பேசியதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.!

By T BalamurukanFirst Published Aug 31, 2020, 7:43 AM IST
Highlights

பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பொம்மைகள் குறித்து பேசியதை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
 

பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பொம்மைகள் குறித்து பேசியதை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

68-து மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசியவர்..'உலகளாவிய பொம்மைத் தொழில் ரூ .7 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. ஆனால் இந்தியாவின் பங்கு மிகவும் சிறியது. அதை அதிகரிக்க நாங்கள் உழைக்க வேண்டியிருக்கும். கோவிட் -19 ஊரடங்கின் போது குழந்தைகளைப் பற்றி சிந்திப்பதாகவும், உள்நாட்டு பொம்மைகளின் உற்பத்தியை அதிகரிக்க தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன்.உள்ளூர் பொம்மைகளுக்கு குரல் கொடுப்பதற்கான நேரம் இது. “வாருங்கள், விளையாடுவோம்… உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள்.” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடியின் பேச்சை விமர்சித்துள்ளார்.. "ஜேஇஇ, நீட் எழுதும் மாணவர்கள், பிரதமர் மோடி தேர்வுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் மோடி இன்று பொம்மைகள் குறித்து விவாதித்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.

click me!