உடனே டாக்டரை கேளுங்கள்...!! கொரோனா குறித்து பிரதமர் சொன்ன எளிய டிப்ஸ்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2020, 12:54 PM IST
Highlights

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது .  அதாவது கூட்டமாக பொதுமக்கள் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . 
 

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்ஒ. என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை மருத்துவர்களை சந்தித்து கேளுங்கள்  என அவர் அறிவுரை வழங்கியுள்ளார் . கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியது ,  இதுவரையில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது .  இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை ,  இதுவரையில் உலகம் முழுவதும் 12 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  சுமார் 3,700 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் .

அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து  வருகின்றன.  அதுமட்டுமில்லாமல் கூடுதலாக 23 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறி இருப்பதால் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .  தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பிய டெல்லி செர்ந்த நபருக்கு நேற்று புதிதாக வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது .  அதாவது கூட்டமாக பொதுமக்கள் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .

 

ஹைதராபாத்தில் உள்ள  தனியார் மென்பொருள் நிறுவனங்களில  பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்  நாட்டில் மருந்து மாத்திரைகள் போதுமான அளவு உள்ளதாகவும் தெரிவித்துள்ள மத்தியஅரசு இது ஒரு சவாலான நெருக்கடி இதை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்  என  அறிவித்துள்ளது.   இந்நிலையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி , கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .  காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது  என்பதை மருத்துவர்களை சந்தித்து கேளுங்கள் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.  
 

click me!