உங்கள் முகம் அழகாக என்னைப்போல் பொலிவாக இருக்க வேண்டுமா...!! பிரதமர் மோடி கொடுத்த டிப்ஸ்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2020, 4:14 PM IST
Highlights

நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் என நாள் முழுவதும் உழைத்தாலும் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ள பிரதமராக இருக்கிறார்கள் நம் பிரதமர் .

கடுமையாக உழைத்தால் போதும் முகம்  பொலிவாகவும்  அழகாகவும் மாறும் என பிரதமர் மோடி  ஆலோசனை தெரிவித்துள்ளார் ,  அவரின் இந்த  ஆலோசனையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .  எந்த பிரதமருக்கும் இல்லாத அளவுக்கு நம் பாரத பிரதமர் மோடி மிடுக்கும் கம்பீரமும் கொண்டவராவார் .  நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும்  சுற்றிச்சூழலும் பிரதமர் மோடியின் உழைப்பை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .  வெளிநாட்டு சுற்றுப்பயணம் வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு , நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் என நாள் முழுவதும் உழைத்தாலும் எப்போதும் சுறுசுறுப்பாக உள்ள பிரதமராக இருக்கிறார்கள் நம் பிரதமர் .

 

இந்நிலையில் நாடெங்கும் இருந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்து பிரதான் மந்திரி பால் புரஸ்கார் விருது பெற்ற  சிறுவர்களை தனது இல்லத்தில் சந்தித்தார் மோடி ,  அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர் ,   இளம் வயதிலேயே நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும்  திறனும் உழைப்போம் தனக்கு வியப்பாக உள்ளது என்றார் .  அப்போது மாணவர்களுக்கு  வெற்றியின்  ரகசியத்தைக் கூறிய அவர் ,   வெற்றியாளர்கள் இரண்டு வகையில் உள்ளனர் சிலர் ஏதாவது ஒரு துறையில் வெற்றி பெற்றாலும் தலை கனத்துடன் யாருடனும்  சேர்ந்து ஆலோசிக்காமல், இணைந்து  உழைக்காமல் அப்படியே தேங்கி விடுகின்றனர் என்றார்,  ஆனால் மற்றும் சிலரோ,  தங்களுக்கு  கிடைத்த வெற்றியால் வரும் பாராட்டுகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு  தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பார்கள் என்றார். 

முன்னதாக ஒரு கூட்டத்தில் தன்னை பார்த்து ஒருவர்  உங்கள் முகம் இப்படி இப்படி பிரகாசமக ஒளிர்கிறது அதற்கு என்ன காரணம் என கேட்டதாக கூறிய மோடி,  அவரின் கேள்விக்கு , நான்  மிகவும் கடுமையாக  உழைப்பேன் ,  அப்பொழுது எனக்கு வியர்க்கும் ,  அந்த வியர்வையோடு முகத்தை  மசாஜ் செய்வேன் ,  என்று நான் பதில் கூறினேன் அப்படி செய்த தால் என் முகம் பிரகாசமாக பொலிவாக உள்ளது என்று விளக்கமளித்தேன் என்றார்.  ஆகவே மாணவர்களும் நாளொன்றுக்கு குறைந்தது  நான்கு முறையாவது வியர்க்கும்படி வேலை செய்யுங்கள் என அறிவுரை கூறினார் . 
 

click me!