பிரதமர் மோடிக்கு எத்தனை தங்கைகள் தெரியுமா.... தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க...

By Selvanayagam PFirst Published Aug 12, 2019, 6:53 AM IST
Highlights

முத்தலாக் நடைமுறையை  கிரிமினல் குற்றமாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி தான் இனி எங்களின் மூத்த சகோதரர் என வாரணாசி இஸ்லாமிய பெண்கள் பாசமழை பொழிகின்றனர்

.

இஸ்லாம்மத வழக்கப்படி கடைபிடிக்கப்பட்டு வந்த முத்தலாக் என்ற விவாகரத்து சட்டத்தால் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்எனவே முத்தலாக் சட்டத்தை கிரிமினல் குற்றமாக அறிவித்த மத்திய அரசு அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாகவும் அறிவித்தது 

மத்திய அரசின் இந்நடவடிக்கை முஸ்லீம் பெண்களிடையே பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

முஸ்லீம் பெண்களை பாதுகாக்கும் நோக்கில் சட்டமியற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை முஸ்லீம் பெண்கள் பாராட்டி வருகின்றனர் 

அதில் வாரணாசியை சேர்ந்த முஸ்லீம் பெண்கள் , முத்தலாக் நடைமுறை இனி செல்லாது என அறிவித்து இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ள பிரதமர் மோடி தான் எங்களின் மூத்த சகோதரர் என கூறுவதுடன், அவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே  பாவிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் மீதான சகோதர பாசத்தை வெளிபடுத்தும் நோக்கில்  அங்குள்ள பெண்கள் அவருக்கு அனுப்பி வைக்க ராக்கி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றார் 

பிரதமர் மோடியை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என சிலர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் , மோடிக்காக ராக்கி தயாரித்து வாரணாசி முஸ்லீம் பெண்கள் அன்பை பொழிந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஆனால் இதை  முற்றிலுமாக மறுத்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் ,விளம்பர நோக்கத்திற்காக வாரணாசியில் உள்ள சில முஸ்லீம் பெண்களை மிரட்டி ராக்கி  தயாரிப்பில் ஈடுபடுத்தி பாஜகவினர் ஈடுபடுத்தி உள்ளனர் எனவும் இது பாஜகவின் விளம்பர யுக்தி எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

click me!