குடியரசுத் தலைவர் தேர்தல்…. பேனா கொண்டு செல்ல எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு தடை…

First Published Jul 17, 2017, 8:27 AM IST
Highlights
president election...use marker pen


இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் வாக்களிக்க அழியாத மை பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அழியாத மைக்கு பதிலாத மார்க்கர் பெனா பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் ராம் நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகிறார். இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தலித் தலைவர்களுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று  நடைபெரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லும் போது எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ. க்கள் பேனா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலர்களிடம் தங்களது பேனாக்களை ஒப்படைத்துவிட்டு வாக்களிப்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள மார்க்கர் பேனாவை கொண்டு செல்ல வேண்டும் என எம்.பி., எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களித்து திரும்பும்போது மார்க்கர் பேனாவை ஒப்படைத்துவிட்டு தங்கள் பேனாக்களை பெற்று செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

click me!