
விழுப்புரம், உடுமலைப்பேட்டை என்று தொடர்ந்து மாநிலமெங்கும் விவசாயிகளின் பிரச்னைக்காக ஆர்ப்பாட்டம் நடந்த துவங்கியுள்ளது தே.மு.தி.க. அந்த வகையில் நேற்று உடுமலைப்பேட்டையில் நடந்த ஆர்பாட்டத்தில் பிரேமலதா ஆவேசமாய் பேசிக் கொட்டியிருக்கிறார்.
மேடையில் பேசிய பிரேமலதா “இந்த கொங்கு மண்டலம் கொடுத்த ஆதரவாலதான் தொடர்ந்து இரண்டாவது முறையா ஜெயிச்சோமுன்னு அ.தி.மு.க.காரங்க பெருமையா பேசிக்கிறாங்க. அப்படி தங்களை ஜெயிக்க வெச்ச மக்களுக்கு என்ன நல்லதை பண்ணியிருக்காங்கன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.
எதுவுமே பண்ணாத இவங்களுக்கு எதுக்குங்க ஓட்டுப்போடுறீங்க? இதுதான் என்னோட கேள்வி. ஏன் அவங்களுக்கு ஓட்டு போட்டீங்க.
கொங்கு மட்டுமில்லை தமிழ்நாடு எங்குமே நொந்துபோய் தான் கெடக்குறாங்க மக்கள். டெங்குவால் இறந்தவங்களோட எண்ணிக்கையை நினைச்சால் மனசு கலங்குது.
டெங்கு கொசுவை உற்பத்தி பண்றாங்கன்னு சொல்லி வீடுகளுக்கும், கடைகளுக்கும் ஃபைன் போடுறாங்க அரசு அதிகாரிங்க. சரி, தமிழ்நாடு முழுக்க ரோடெல்லாம் குப்பை கூளமா இருக்குதே. நாள்கணக்கா அள்ளப்படாமல் குப்பை நிரம்பி வழியுதே! பெய்யுற மழையில் பாதி, அப்படியே பாத்திரமாட்டமா ரோட்டுல இருக்குற குழியில தேங்கியே கிடக்குதே! இதுல எல்லாம் லட்சக்கணக்குல கொசு உற்பத்தியாகி வளருதே. இந்த குத்தத்துக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஃபைன் போடலாமா? மக்கள் தப்பு பண்ணுனதா சொல்லி நீங்க ஃபைன் போடுறப்ப, கண்ணுக்கு எதிரே நீங்க பண்ணுற குத்தத்துக்கு நாங்க ஏன் ஃபைன் போடக்கூடாது?
இத்தனை ஆட்டம் போடுற இந்த ஆட்சி கூடிய விரைவில் கவிழ்வது உறுதி.” என்று பின்னியெடுத்துவிட்டு நகர்ந்தார்.