தேமுதிக எதிர்காலம் அவ்வளவு தானா..? பேரம்பேச முடியாத பெரும் சிக்கலில் பிரேமலதா..!

By Thiraviaraj RMFirst Published May 24, 2019, 12:53 PM IST
Highlights

அடுத்த தேர்தல்களில் தேமுதிகவை பெரும் கட்சிகள் கூட்டணிக்கு அழைக்குமா? என்கிற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. 

மக்களவை தேர்தலில் திமுக முன்றாவது பெரிய கட்சியாக இடம்பெற்றுள்ளது. திமுக மக்களவை தேர்தலில் 32 சதவிகித வாக்குகளையும், அதிமுக 18 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.

 

அதன்படி மக்களவை தேர்தலில் திமுக 32.76, அதிமுக18.49 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 12.76 சிபிஐ- 2.44, சி.பி.எம் 2.40 முஸ்லீம் லீக் 1.11 பெரும்பாலான தொகுதிகளில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு நிகராக மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. அமமுக 4.8 சதவிகித வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3.8 சதவிகிதமும், மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன. 

அதேபோல் தேமுதிக 2.19 சதவிகித வாக்குகளையும், பாஜக- 3.66 பாமக- 5.42 நோட்டாவுக்கு 1.28 சதவிகித வாக்குகளுக்ம் கிடைத்துள்ளன. 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுக- 7.77 சதவிகிதம், நாம் தமிழர் தமிழர் 3.5 வாக்குகளை பெற்றுள்ளன. இதன் மூலம் இந்த தேர்தலில் அமமுக மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

ஒரு காலத்தில் 10 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருந்த தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடபெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளிலேயே மிகக்குறைந்த அளவான 2.19 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளை விட மிக மிகக் குறைவு. ஆகையால் அடுத்த தேர்தல்களில் தேமுதிகவை பெரும் கட்சிகள் கூட்டணிக்கு அழைக்குமா? என்கிற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. 

click me!