"ஆதரவை கேட்க மாட்டோம்" : பிரேமலதா - "உங்களுக்கு ஆதரவே இல்லை" : திருமாவளவன்

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 08:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
"ஆதரவை கேட்க மாட்டோம்" : பிரேமலதா - "உங்களுக்கு ஆதரவே இல்லை" : திருமாவளவன்

சுருக்கம்

மக்கள் நலக்கூட்டணி தேமுதிக விவகாரம் நாளுக்கு நாள் முற்றி இன்று வெடித்து விட்டது. சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டு வைத்தது தேமுதிக .அந்த தேர்தலில்  விஜயகாந்தின் கோமாளித்தனம் மற்றும் வைகோவின் முரண்பட்ட கருத்துகள் காரணமாக மக்களிடம் நம்பக தன்மை குறைந்தது. 

இதனால் ஒரு இடம் கூட மக்கள் நலக்கூட்டணி தேமுதிக , தமாகாவால் பெற முடியவில்லை. இதன் விளைவு கூட்டணியில் இருந்து முதலில் தமாகாவும் பின்னர் தேமுதிகவும் விலகியது. இதன் பின்னர் தேமுதிக அரசியல் குறைந்து போனது விஜயகாந்தும் வெளியில் வருவதை தவிர்த்தார்.

 உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவில் சீட்டு கேட்க கூட தொண்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விஜய்காந்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. தன்னிச்சையான நடவடிக்கை மற்றும் திமுகவின் உள்ளடியால் நிர்வாகிகள் வெளியேறினர்.

விஜயகாந்தும் தனது தீவிர அரசியல் நடவடிக்கைகளை குறைத்து கொண்டு அறிக்கைகள் மூலம் வாழ்கிறார். இந்நிலையில் தஞ்சை அரவக்குறிச்சி , திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் மக்கள் நலக்கூட்டணி புறக்கணித்தது. தேமுதிக நிற்பதாக அறிவித்தது. 

சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்க கூடாது என்கிற ரீதியில் கோபால் சாமி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பிரேம லதா கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி குறித்து நீங்களாகத்தான் எங்களை தேடி வந்தீர்கள் என்று கூறினார்.

இந்நிலையில் தேமுதிக ஆதரவு கேட்டால் தரத்தயார் என திருமாவளவன் மற்றும் இடதுசாரிகள் அறிவித்திருந்தனர்.  இந்நிலையில் ஆதரவு கேட்கும் அவசியம் இல்லை அவர்கள் தான் தரணும் , கேட்டு பெறுவது சுயநலம் என்று பேட்டி அளித்தார். 

இது பற்றி இன்று பேட்டி அளித்த திருமாவளவன்  யாருக்கும் வலிய சென்று ஆதரவளிக்கும் நிலையில் மக்கள் நலக்கூட்டணி இல்லை என்று தெரிவித்தார்.கேட்காமல் ஆதரவளிக்கும் நிலையில் மக்கள் நலக்கூட்டணி இல்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!