காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் ஐபேக் பிரசாந்த் கிஷோர்..? பாஜகவுக்கு எதிராக பட்டை தீட்ட தயார்..!

By Thiraviaraj RMFirst Published Jul 14, 2021, 3:53 PM IST
Highlights

தேர்தல் வியூகரும், ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், அடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தல் வியூகரும், ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், அடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்க மாநிலம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வியூகம் அமைத்துக் கொடுத்தார். அவர் அமைத்துக் கொடுத்தது போலவே தமிழகத்தில் திமுகவு, மே.வங்கத்தில் மம்தா பானர்ஜியும் வெற்றி பெற்றனர். pஇன்னர் தான் தேர்தல் பணிகளில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும், தனது நண்பர்கள் அந்தப்பணிகளை பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில், திடீரென நேற்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல்காந்தி, பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோரையும் சந்தித்து பேசினார். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்க இருப்பதாக பேசப்பட்டது 

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கவும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை பா.ஜ.க,வுக்கு எதிராக வலிமை கொண்ட எதிர்க்கட்சியாக மாற்றவும் பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரசாந்த் கிஷோர், ஏற்கனவே ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்து, பின்னர் வெளியேறினார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. 

click me!