OTT-யில் படத்தை வெளியிடுவது திரைத்துறைக்கு நல்லது அல்ல..!! விரைவில் பிரச்சனைக்கு தீர்வு என அமைச்சர் அதிரடி.

Published : Oct 06, 2020, 12:56 PM IST
OTT-யில் படத்தை வெளியிடுவது திரைத்துறைக்கு நல்லது அல்ல..!! விரைவில் பிரச்சனைக்கு தீர்வு என அமைச்சர் அதிரடி.

சுருக்கம்

OTT என்பது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் தளம் அல்ல, கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிக ஏற்பாடாக அதில் படங்களை வெளியிட்டால் நல்லது, நிரந்தரமாக வெளியிட்டால் திரைத்துறை பாதிக்கப்படும்.

சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான், கொரோனா பாதிப்பு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 

OTT என்பது மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் தளம் அல்ல, கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிக ஏற்பாடாக அதில் படங்களை வெளியிட்டால் நல்லது, நிரந்தரமாக வெளியிட்டால் திரைத்துறை பாதிக்கப்படும். திரையரங்கு சென்று படம் பார்த்தால் தான் மக்களுக்கு படம் பார்த்த திருப்தி இருக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்து அரசு அவர்களுக்கு உதவும். 

கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கிறது. அதனால் தற்போதைய நிலையில் திரையரங்குகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை. திரைத்துறையில்  நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.3 மணி நேரம் ஒரே அரங்கில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மத்திய மற்றும் மாநில சுகாதார குழுவுடன் ஆலோசித்து அதன் பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பிறகு திரையரங்கள் திறப்பது குறித்து நல்ல முடிவு  அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
 

 

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!