பொங்கல் பரிசு மீண்டும் டாஸ்மாக் மூலம் வந்து சேரும்... குடிகாரர்களைவிட திண்டுக்கல் சீனிவாசனின் மோசமான பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Jan 4, 2021, 5:59 PM IST
Highlights

குடிமகனுக்கு வழங்கப்படும் காசு டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே வரும் என பொங்கல் பரிசு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. 

குடிமகனுக்கு வழங்கப்படும் காசு டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே வரும் என பொங்கல் பரிசு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. 
 
திண்டுக்கல் ஒன்றியம், கோம்பையான்பட்டியில் நேற்று இரவு அரசின் மினி கிளினிக் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர்,  குடிபோதையில் இருந்த தொண்டர் ஒருவர், “பொங்கல் பரிசு தொகுப்பிற்கான கூப்பன் தனக்கு கிடைக்கவில்லை” என குற்றம் சாட்டினார். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “டாஸ்மாக்கோட பெரிய கொடுமையா போச்சு... எப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார் பாருங்க? இவருக்குக் கொடுக்கப்படும் காசு டாஸ்மாக் மூலம் மீண்டும் நமக்குதுதான் வரும். இவரு காசு எங்கேயும் போகாது. அரசாங்க பணம் அரசாங்கத்துக்கே வந்து சேரும். வேட்டி, சேலை, அரிசி, பருப்பு, கரும்புன்னு கொடுக்குறதுலாம் அது அவரு மனைவிக்கு போயிடும். கரும்பை பாதிவிலைக்கு விற்க முடியாது” எனத் தெரிவித்தார். 

இவரது பேச்சு குடிமன்களைவிட மோசமாக இருக்கிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படி அடிக்கடி சர்ச்சையாக பேசி கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன். 

click me!