பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு ரூ. 2000... உறுதிப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

By Thiraviaraj RMFirst Published Nov 21, 2019, 4:42 PM IST
Highlights

பொங்கல் பரிசாக குடும்பத்திற்கு தலா ரூ.2000 கொடுக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்தையும் வழங்கி அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.  பொங்கலை அடுத்தோ, அதற்கு முன்னரோ உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு 2000 ரூபாயை பொங்கல் பரிசாக எடப்பாடி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. 

அதனை உறுதி செய்யும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் குடும்பத்திற்கு 2000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் உள்ளாட்சித்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமை விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. காரணம், இன்னும் பல துறைகளில் டெண்டர்கள் விடவில்லை. டெண்டர்களை முழுமையாக முடித்து, டிரான்ஸ்பர்களை பூர்த்தி செய்த பிறகே அதிமுக தேர்தலுக்கு தயாராகும் என அக்கட்சி தலைமை நிர்வாகிகள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ரூ.2000 வீதம் ஒரு குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்க உள்ளது. அது போக ஒரு குடும்பத்திற்கு ரூ.1000 என உள்ளாட்சித்தேர்தலை மனதில் வைத்து அதிமுக பட்டுவாடா செய்யும் திட்டத்தில் இருக்கிறது.

டிசம்பரில் தேர்தல் நடத்தினால் பணம் பட்டுவாடா செய்வதில் சிக்கல் உருவாகும் என்பதால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. பாஜக கூட்டணி அமைத்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் ஏதாவது காரணத்தை சொல்லி காரியம் சாதித்து விடலாம் என காய் நகர்த்தி வருகிறது அதிமுக. ஆகையால் வரும் டிசம்பர் -2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் எப்போது என்கிற அறிவிப்பில் மாற்றம் வரலாம் எனப் பேசிக் கொள்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 

ரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..! பரபரப்பு வீடியோ.....

click me!