பாண்டிச்சேரியிலும் மதுக்கடைகள் அடைப்பு.!! தமிழக மதுப்பிரியர்கள் எல்லை தாண்ட முடியாமல் அவதி.!!

By T BalamurukanFirst Published May 9, 2020, 11:02 PM IST
Highlights

  பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் வருவாயை ஈட்டுவதற்காக நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக தமிழகத்தில் உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் மதுக்கடைகளைத் திறந்து விற்பனையை மேற்கொள்ளும் வேளையில் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை என மும்பை தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அம்மாநில உயர் நீதிமன்றங்கள்  மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்துமுதல் நாள் குடிமகன்யாசெய்த சேட்டைகள் தாங்க முடியாமல் அளவுக்கு அதிகமாகியது. கூட்டம் அலை மோதியதால் நீதிமன்றம் தலையிட்டு கடைகளில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கவும் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு தொடர்பாகவும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. ஆன்லைன் மதுபான விற்பனையின் சாதக பாதகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் மதுபான விற்பனை என்பது சாத்தியமாகாது என்பதால் மதுக்கடைகளை தற்போது திறப்பதில்லை என்றும் ஊரடங்கு உத்தரவு முடியும்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து என்றும் முடிவு செய்யப்பட்டது.இதனால் அங்கு மதுகூடங்கள் மே17 வரைக்கும் மூடப்பட்டிருக்கிறது.

click me!