
கருணாநிதிக்காக வைரவிழா நடத்தாமல் அரசியல் லாபத்துக்காவே திமுகவினர் விழா நடத்துவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுகவினர் அரசியல் லாபத்துக்காவே கருணாநிதிக்கு வைரவிழா நடத்துவதாக தெரிவித்தார்.
அந்த வைர விழாவுவில் பாஜக கலந்து கொள்ளாது என்றும், அவர்கள் எங்களை அழைக்க வேண்டாம் என்றும் அவர்கள் யார் எங்களை அழைப்பது என்றும் பொன்னார் கேள்வி எழுப்பினார்.
அமராவதி நகர் கட்டும் பணி நிறைவடைந்தால் சென்னை அதன் பொலிவை இழக்கும் என்றும், அந்த அளவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியில் சென்னை மோசமாகி வருகிறது என தெரிவித்தார்.
நீட் தேர்வில் எந்த குழப்பமும் இல்லை என்றும், தமிழக அவசியல்வாதிகள் தான் மாணவர்களை நீட் தேர்வு வராது என்று கூறிமாணவர்களை குழப்பிவிட்டனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஒவ்வொரு வெளிநாட்டு பயணமும் இந்தியாவுக்கு நன்மை செய்வதாகவே இருக்கும் என தெரிவித்த பொன்னார், அவரின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் தெரிவித்தார்.