பொள்ளாச்சி வன்கொடுமை... குற்றவாளிகளுக்காக சென்னையில் இருந்து விமானத்தில் பறந்த மூத்த வழக்கறிஞர்..!

By Selva Kathir  |  First Published Mar 12, 2019, 9:42 AM IST

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திருப்பம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திருப்பம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் திருநாவுக்கரசு என்பவன் தான் முக்கிய குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்படுகிறான். ஆனால் இந்த வழக்கில் சூத்ரதாரியே நாகராஜ் தான் என்கிறார்கள். அதுவும் நாகராஜ் என்றால் யாருக்கும் தெரியாது. பார் நாகராஜ் என்றால் தான் பலருக்கும் இவனை தெரியும். பார் நாகராஜ் குறித்து பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் முதல் பெரும் செல்வந்தர்கள் வரை தெரியாத நபர்களே இல்லை என்று சொல்லலாம்.  

Tap to resize

Latest Videos

ஏனென்றால் பொள்ளாச்சிக்கு படப்பிடிப்புக்கு வரும் நடிகைகளை முதற்ககொண்டு நாகராஜ் செல்வந்தர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் அளவிற்கு செல்வாக்கானவன் என்கிறார்கள். இவன் மூலமாகத்தான் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி சீரழித்துள்ளனர். பெண்கள் வழக்கில் நாகராஜ் சிக்கிய அடுத்த சில மணி நேரங்களில் சென்னையில் இருந்து பிரபல வழக்கறிஞர் ஒருவர் விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து பொள்ளாச்சி காவல் நிலையம் சென்றுள்ளார். 

ஆனால் அதற்குள் மாவட்ட எஸ்.பி அவனை ரிமான்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் கொதித்துப்போன அந்த வழக்கறிஞர் எஸ்.பிக்கு நேராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவுண்ட் விட்டதாக கூட கூறுகிறார்கள். ஆனால் விவகாரம் மிகப்பெரியது என்பதால் எஸ்.பி அந்த வழக்கறிஞரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கியதாக சொல்கிறார்கள். மேலும் பார் நாகராஜனை காப்பாற்றவேண்டும் என்றால் திருநாவுக்கரசை காலி செய்ய வேண்டும் என்று கூட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

ஆனால் விவகாரம் மீடியாக்களின் கவனத்திற்கு வந்த காரணத்தினால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பார் நாகராஜனை அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளனர் ஓ.பி.எஸ் மற்றும் ஈபி.எஸ் ஆனால் விவகாரம் எல்லை மீறிவிட்டது. இதனிடைய இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை தொடர்பு படுத்தி வெளியிட்ட செய்திகள் திமுக தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

click me!