முதல் ஃப்ளோரில் அக்கா, ரெண்டாவது ஃப்ளோரில் தங்கச்சி... ‘ மொட்டைமாடியில யாரு? அரசியல் VIP யின் ஆண்டியோஃபோபியா' அந்தரங்கம்!

Published : Sep 11, 2018, 09:38 PM ISTUpdated : Sep 19, 2018, 09:23 AM IST
முதல் ஃப்ளோரில் அக்கா, ரெண்டாவது ஃப்ளோரில் தங்கச்சி... ‘ மொட்டைமாடியில யாரு? அரசியல் VIP யின் ஆண்டியோஃபோபியா' அந்தரங்கம்!

சுருக்கம்

’சின்ன வயசுலயிருந்தே ரெட்ட வாழைப்பழமா தேடித்தேடி திம்பான் எம் மவன். அவனுக்கு  ரெட்ட குழந்தை பொறக்குமுன்னு நினச்சேன். ஆனா இப்படி மூணு கல்யாணத்த பண்ணிட்டு, எக்ஸ்ட்ராவா செட்டப்புகளும் வெச்சுப்பான்னு கெனாவுல கூட நினைக்கலையே!’ - அந்த வி.ஐ.பி.யின் அப்பா  புலம்பியதை பார்த்து சிரிக்கவா, வருந்துவதான்னு புரியலை சீனியர் நிர்வாகிகளுக்கு. 

’சின்ன வயசுலயிருந்தே ரெட்ட வாழைப்பழமா தேடித்தேடி திம்பான் எம் மவன். அவனுக்கு  ரெட்ட குழந்தை பொறக்குமுன்னு நினச்சேன். ஆனா இப்படி மூணு கல்யாணத்த பண்ணிட்டு, எக்ஸ்ட்ராவா செட்டப்புகளும் வெச்சுப்பான்னு கெனாவுல கூட நினைக்கலையே!’ - அந்த வி.ஐ.பி.யின் அப்பா  புலம்பியதை பார்த்து சிரிக்கவா, வருந்துவதான்னு புரியலை சீனியர் நிர்வாகிகளுக்கு. 

தெற்கு சீமை அரசியலில் தலைமை மாவட்டம் அது. அங்கே சாதாரண மக்கள் கூட ஆளுக்கு ஆளு நாட்டாமைகளாக திரிவார்கள். 

அப்படியென்றால் அரசியல்வாதிகளை கேட்கவா வேண்டும்? சண்டியர்தனத்துக்கும், தாட்பூட் தஞ்சாவூர் என  பேச்சுவழக்குகளுக்கும் கேட்கவே வேண்டாம். 

அப்படியாப்பட்ட மனுஷந்தேன் அவரு. மீசை அரும்பையிலேயே கட்சிக்குள்ள நுழஞ்சு, எளந்தாரியா இருக்குறப்பவே மாவட்ட பொறுப்புக்கு வந்துட்டாரு. அந்த மாவட்ட செயலாளர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் எல்லாருக்கும் அவர புடிக்கும். காரணம் சொடுக்கிவிட்ட பம்பரமாட்டமா சுறுசுறுன்னு கள வேலையில நிக்குறதுதேம். அந்த வகையில மகளிர் அணி நிர்வாகிகளுக்கும், பொது வெளியில பல தளங்களை சேர்ந்த பெண்களுக்கும் இவரு பழக்கந்தேம், வழக்கந்தேம். 

புல்லட்டு வண்டியில வாரத்துக்கு ஒருத்திய உட்காரவெச்சுக்கிட்டு கருவேலங்காட்டுப் பக்கமா இவரு ஒதுங்குறத, எவனோ ஒரு எடுபட்டபயபுள்ள அவரு அப்பன்கிட்ட போட்டுக் கொடுத்துட்டான். 

தோளுக்கு மீறுன பய, அதுலேயும் அரசியல்வாதி வேற. மெரண்ட அப்பனும், ஆத்தாளும் காதுங்காதும் வெச்ச மாதிரி சொந்தத்துலேயே ஒரு புள்ளய பார்த்து சுளுவா கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டாய்ங்க. 

கல்யாண பார்ட்டி அதே கருவேலங்காட்டுக்குள்ளே களைகட்டுச்சு, ‘ஏம்ணே ஒனக்கு என்ன வயசாயிடுச்சுன்னு இப்பூடி கலியாணத்துக்கு திடுதிப்புன்னு ஒத்துக்கிட்டவன்?’ என்று எடுபுடி ஒருத்தன் கேட்க, ‘எலேய், எத்தன நாளைக்குதாம்லே திருட்டுத்தனமா மாங்காய கடிக்குறது? லைசென்ஸ் வாங்கி ஒண்ணை கையோட வெச்சுக்கிட்டோமுன்னா நெதமும் ஆற அமர கச்சேரி நடத்தலாமில்லையா, என்ன நான் சொல்றது?’ என்று பொசுக்குன்னு பதில் சொல்ல, அந்த கருவேலங்காடே தெறித்துச் சிரித்தது. 

கல்யாணத்துக்கு ஒரு மாசம் இருக்கையிலேயே அண்ணனுக்கு ஆசை அடங்கலை. நிச்சயமான பொண்ணு பிளவுஸ் துணி எடுக்க, மருதாணி போடன்னு டவுனுக்கு தோழிங்க கூட வர்ற சரியா மோப்பம் பிடிச்சுட்டு போயி பொண்ணை தூக்கிடுவாரு நம்ம மைனர். ‘வாபுள்ள ஒரு வாய் ஐஸ்க்ரீமு சாப்பிட்டுட்டு போ! மாமன் எம்புட்டு நேரம் ஒனக்கு காத்துட்டு கெடக்கேம்?’ என்று மிக நேர்த்தியாய் ரூட்டை கொடுக்க, அந்தப்புள்ளையோ ‘ஆமா ஆசைய பாருங்க. தாலி கெட்டுறதுக்கு முன்னாடி உங்க கூட சுத்துறத பார்த்தா எங்கப்பன் வீச்சருவாள தூக்கிடுவாரு!’ என்று கட்டையை போடும். 

ஆனா பேசி மயக்க கேட்கவா வேணும் நம்மாளுக்கு. ‘சரி தாயி நீ ஒங்கப்பன் பேச்சை கேட்டுக்கிட்டு கெட. 

நான் எங்க கட்சிக்காரி ஒருத்தியோட மக இங்ஙன காலேஜ்லதான் படிக்கிறா. அவளை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுறேம்’ என்று புல்லட்டை மிதிப்பார். பொசஸிவ்னஸ் பிய்த்து தின்ன அந்த பொண்ணு ஓடி வந்து வண்டியில் ஏறிக்கொள்ளும். இப்படியே ரெண்டு தடவை ஐஸ்க்ரீம் பார்லருக்கு கூட்டிட்டு போயி ஸ்ட்ராபெர்ரி வாங்கி கொடுத்தவரு, ஒரு நாள் நண்பனோட லாட்ஜுக்கு கூட்டிட்டு போயி சகலத்தையும் நடத்திட்டாரு. ’கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் தப்புல்ல?’ என்று அந்த பெண் அழ, ’கட்டிக்கப்போறவன் கூட தாலிக்கு முன்னாடியே தாம்பத்யம் பாக்குறது தனி சுகம்டி.’ என்று எக்ஸ்ட்ராவாக பிட்டை போட்டு மறுபடியும் ஒரு ரவுண்டு போய்விட்டார் பாலிடிக்ஸ் மைனர். 
ஒருவழியாக கல்யாணம் முடிந்தது. மறுவீடு முடிந்த மறுநாளே தேனிலவுக்கு கொடைக்கானல் போய் கும்மியடிச்சுட்டு வந்தது ஜோடி. 

அடுத்த சில வாரங்களில் புதுப்பொண்ணுக்கு மசக்கை வாந்தி வர, நாடி பிடிச்சுப் பார்த்த ஊர் வைத்திச்சி ’என்னடி பண்ணுனவ, கருவோட நாள் எண்ணிக்கைய பார்த்தா, உங் கலியாணத்துக்கு முன்னாடியே உருவாகியிருக்கும் போலிருக்கே?’ என்று கரெக்டாய் அடித்தாள் நெற்றியில். ’அய்யய்யோ இது மாப்பிள்ளைக்கு தெரிஞ்சா கொலை வுழுந்துடுமே!’ என்று பொண்ணு குடும்பமே அலற, ‘அவருதேம் இதுக்கு காரணம்’ என்று கட்டை விரலை கட்டாந்தரையில் தேய்த்தபடி சொன்னது பொண்ணு. அப்பதான் அந்த குடும்பத்துக்கு போன உசுரு மீண்டது. 
 

மசக்கை இம்சைக்கு நடுவிலும் பொண்டாட்டியை  சுற்றிச்சுற்றி வந்தார் அரசியல்வாதி மாப்பிள்ளை. இவங்களை இப்படியே விட்டா எசகுபிசகாகிடுமுன்னு பொண்ணை  பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டது அண்ணனின் குடும்பம். நெதமும் ராத்திரிக்கு சோறு கூட கவுச்சியும், இழுத்து கட்டிக்க பொண்டாட்டியுமில்லாட்டா தூக்கமே வராது அவருக்கு. ரெண்டு நாள் பொறுத்துப் பார்த்த மனுஷன் மூணாவது நாள் பொண்டாட்டி வீட்டுக்கே குடிபோயிட்டார். 

அந்த வீட்டில் இதுங்க ரெண்டும் அடிச்ச லூட்டியை பார்த்து கிண்டலடிப்பதே பொண்ணோட தங்கச்சியின் ஒரே பொழப்பாக இருந்தது. 

காலேஜ் போயிட்டு வந்ததும் கெட்ட கதைகளை அக்காவிடம் சாடையாக பேசிப் பழகிய பொண்ணு, ஒரு கட்டத்தில் அக்கா புருஷனிடமும் ஓவர் உரிமை எடுக்க துவங்கியது. ச்சும்மாவே டான்ஸ் ஆடுறவரு, காலுல சலங்கையை கட்டிவிட்டாக்க கம்முன்னு இருப்பாரா? நண்டை சீண்ட துவங்கியது நரி. 

குளிச்சுட்டு வரும் போது எசகுபிசகான உடையில் எதிர்படுவது, சாப்பாடு பரிமாறும்போது தொட்டுப் பொங்கிக் கொள்வது என்று அடுத்தடுத்த கியர்களை போட்ட அந்த உறவு ஒரு நாள் பிற்பகலில் உச்சம் தொட்டது. ஸ்கேனிங்கிற்காக புள்ளத்தாச்சி மகளை கூட்டிக்கொண்டு அப்பனும், அம்மாவும் டவுனுக்கு போய்விட்டனர். ‘மாமன் வந்தா மறக்காம சாப்பாடு போட்டுடி. பசி தாங்கமாட்டாரு’ என்று தங்கையிடம் வெள்ளந்தியாய் சொல்லிவிட்டு, வயித்தை பிடித்துக் கொண்டு நகர்ந்தாள் அக்கா. 

அன்றைக்கு மாவட்ட அளவில் பதவி கிடைத்திருந்ததால் பெரும் உற்சாகத்தில் வந்தார் அரசியல்வாதி மாப்பிள்ளை. 

பெரிய காரில் ஒரு படையே அவரை கொண்டு வந்து இறக்கிவிட்டு போனது. சீனியர் மனுஷய்ங்க கூட தன் மச்சானை பார்த்து ‘தலைவரே!’ என்று பம்மியதை பார்த்து பெருமை பிடிபடலை மச்சினிக்கு. 

எல்லோரும் போன பிறகு, நெருங்கி வந்த மச்சான் ‘இது ஒனக்குதான் டி!’ என்று காஸ்ட்லியான ஒரு சுடிதார் மெட்டீரியலை அள்ளிக் கொடுத்தார். 

சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கையில் ‘ஏண்டி மாமனுக்கு என்ன கிஃப்டு கொடுக்க போறே?’ என்று இவர் பிட்டை போட, செல்லமாய் முறைத்துவிட்டு தன் அறைக்குள் ஓடிப்போய் படுத்துக் கொண்டாள் மச்சினிச்சு. 

கையை கழுவிவிட்டு அந்த அறைக்குள் சிங்கம் போல் நுழைந்தார் மாமா. சின்ன வயதில் தன் அக்காவின் பொம்மையை உரிமையாக எடுத்து விளையாடிய அந்த தங்கை, வயசுக்கு வந்த காலத்தில் அக்காவின் தாவணியை உரிமையாக கட்டிக் கொண்ட அந்த தங்கை, இப்போது அக்காவுக்கு சொந்தமான மனுஷனின் மார்பு மீது எந்த தயக்கமுமில்லாமல் மிக உரிமையாக முகம் புதைத்து பரவினாள்....
அதன் பிறகு அங்கு நடந்த விஷயங்களை விளக்க்க்க வார்த்தைகளே இல்லை. ‘ஏய் ஸ்கிரீனை போடு, ஸ்கிரீனை போடு’ ரகங்கள்தான். 

அக்காவுக்கு களுக் மொளுக்குன்னு பொண்ணு பொறந்து ஒரு மாசம்தானிருக்கும், தங்கச்சிக்கு தள்ளிக் கொண்டு வந்தது மசக்கை வாந்தி. குடும்பமே ரெண்டுபட்டது. என்ன நடந்தது? என்று அக்காவிடம் புட்டுப் புட்டு வைத்தாள் தங்கச்சி. விஷயம் பெரியவர்களுக்கு பாஸ் ஆனது. அடுத்து சொந்தபந்தங்களுக்கும் தகவல் கசிந்தது. வீட்டுப் பஞ்சாயத்தின் இறுதி தீர்ப்பாக தங்கச்சியை அக்காளுக்கு சக்களத்தியாக்கினார்கள். 

ரெட்ட வாழை பிரியனுக்கு ரெண்டு பொண்டாட்டி கிடைச்ச ஜோரில் அரசியலிலும் அதிர்ஷ்டம் அள்ளிக் கொண்டு வந்தது. மக்கள் பிரதிதியாகி எங்கேயோ போய்விட்டார். அடுத்தடுத்த வருடங்களில் மூணு மாடி வீடு கட்டி குடியேறினார். முதல் ஃப்ளோரில் அக்காவையும், ரெண்டாவது ஃப்ளோரில் தங்கச்சியையும் குடிவைத்தார். ஒரு இரவு முதல் மாடியில், அடுத்த இரவு ரெண்டாவது மாடியில் என்று காலம் போனது.

’என்னைக்காவது மூணு பேரும் மொட்டை மாடியில் இருப்பாங்களா?’ன்னு யாராச்சும் டீஸன்ஸி இல்லாம கேட்டால், சப்பல்ஸ் பிய்ஞ்சுடும். 
மூத்தவளுக்கு ரெண்டு பொண்ணுங்க, இளையவளுக்கு ஒரு பையன்னு வாழ்க்கை போயிட்டிருந்த நேரத்துலதான் மூணாவதா ஒரு வாய்ப்பு வந்துச்சு அண்ணனுக்கு. 

பரந்து விரிஞ்சிருந்த அவரோட பிஸ்னஸ் சாம்ராஜ்யத்தோட கணக்கு வழக்குகளை பார்த்துக்குறதுக்காக ஒரு லேடி வந்து சேர்ந்தார்.  இவரை விட நாலு வயசு அதிகமான பெண் அவர்.

நம்ம வி.ஐ.பி.யின் கம்பெனியில் இணைவதற்காக தான் பார்த்துக் கொண்டிருந்த அம்மாம் பெரிய பேங்க் வேலையை உதறிட்டு வந்த பெண்மணி, ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தையும் உதறிவிட்டு இவரோடே ஐக்கியமாகிவிட்டது. அக்காவும், தங்கச்சியும் அழுது வடிஞ்சு மூக்கு சிந்தியும் பிரயோசனமில்லை. ‘ஆண்டியோஃபோபியா’ அண்ணனை போட்டு ஆட்டியதில் சில மாதங்கள் அந்த பெண்மணியோடு தனி வில்லா எடுத்து தங்கிவிட்டார். 

மீண்டும் ஒரு பஞ்சாயத்தை நடத்திட அந்த குடும்பத்து ஆட்களுக்கு தைரியமில்லை. காரணம்? அரசியலில் அண்ணன் எட்டிய உயரம் அப்படி. ஒரு கட்டத்தில் கண்ணீரும், புலம்பல்களும் கணிசமான சொத்துப்பங்கீடு மூலமாக சமாதானப்படுத்தப்பட்டன. 
இப்போது வாரத்தில் நான்கு நாட்கள் ரெட்டை மாடி வீட்டிலும், மூன்று நாட்கள் புதிதாய் வாங்கிய வில்லாவிலுமாய் கழிகிறது அந்த வி.ஐ.பி.யின் வாழ்க்கை. 
என்னா வாழ்க்கைடா!

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்