அதே நாளில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.. டிடிவி.தினகரன்..!

Published : Jun 23, 2021, 06:31 PM IST
அதே நாளில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.. டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

சேலத்தில் காவல்துறையினர் தாக்கியதால் முருகேசன் என்கிற வியாபாரி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களிடம் காவல்துறையினர் இத்தகைய வன்முறைப் போக்கைக் கடைப்பிடிப்பதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

சேலத்தில் காவல்துறையினர் தாக்கியதால் முருகேசன் என்கிற வியாபாரி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- சேலத்தில் காவல்துறையினர் தாக்கியதால் முருகேசன் என்கிற வியாபாரி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களிடம் காவல்துறையினர் இத்தகைய வன்முறைப் போக்கைக் கடைப்பிடிப்பதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை - மகன் இருவரும் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததன் முதலாமாண்டு நினைவு நாளில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், மக்களிடம் வன்முறையைக் கையாளாமல் நடந்து கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளும், காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஆலோசனைகளும் காவல்துறையினருக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!