மோடியின் வீட்டுக்கே போய் கெத்துகாட்டிய ராமதாஸ்...!! பாமகவின் பவர்ஃபுல் பாலிடிக்ஸ் அதிரடி..!! அதிமுக ,திமுக அதிர்ச்சி...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 10, 2019, 2:30 PM IST
Highlights

இந்திய - சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான பேச்சுக்கள் நாளையும், நாளை மறுதினமும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்கள் சார்பில்  நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். 

பிரதமர் மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில்  பாமக நிறுவனத்தலைவர்  ராமதாஸ், மற்றும் அவரது மகன் அன்புமணி இராமதாஸ் ஆகியோர்  சந்தித்து பேசினர், சுமார் 20 நிமிடங்களுக்கும் மோலாக நீடத்த இந்த சந்திப்பில், ஏழு தமிழர் விடுதலை  மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர்.

அத்துடன்   இந்திய - சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நாளையும், நாளை மறுதினமும் மாமல்லபுரத்தில் பிரதமர் சந்திக்க உள்ளதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், தமிழகத்தில் நடக்கும் இந்நிகழ்வால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்கள் சார்பில்  நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். அத்துடன் கடந்த 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தியதுடன்,  பிரதமர் மோடி அவர்களிடம் புகார்  மனு ஒன்றை கொடுத்தார். அதில்,  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1991&ஆம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி நிறைவேற்றி தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. அதன்மீது ஆளுனர் விரைந்து முடிவெடுப்பார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது  காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை அனுப்பப்பட்டு நேற்றுடன் ஓராண்டும், ஒரு மாதமும் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அதன் மீது தமிழக ஆளுனர் அலுவலகம் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த தாமதம் உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.

 

தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தில் பரிந்துரைத்துள்ளவாறு 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாண்புமிகு  பிரதமராகிய தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் தங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று வலியுறுத்தியுள்ளார். 

click me!