கருணாநிதி என்னை பார்த்து சிரித்தார்... விரைவில் பேசுவார்... - ராமதாஸ் உறுதி...! 

Asianet News Tamil  
Published : Oct 31, 2017, 09:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
கருணாநிதி என்னை பார்த்து சிரித்தார்... விரைவில் பேசுவார்... - ராமதாஸ் உறுதி...! 

சுருக்கம்

pmk founder ramadoss meet to dmk leader karunanithi

திமுக தலைவர் கருணாநிதி தன்னை சிரித்த முகத்தோடு வரவேற்றதாகவும் விரைவில் அவர் பூரண நலம் பெற்று பேசுவார் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி சில ஆண்டு காலமாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இன்று திடீரென கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், திமுக தலைவர் கருணாநிதி தன்னை சிரித்த முகத்தோடு வரவேற்றதாகவும் விரைவில் அவர் பூரண நலம் பெற்று பேசுவார் எனவும் தெரிவித்தார். 

மேலும் முன்பு இருந்ததை விட நல்ல உடல் நலத்துடன் கருணாநிதி இருப்பதாக ராமதாஸ் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின்போது, அவருடன், மு.க.ஸ்டாலின் , ஆ.ராசா, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?