ராகுலின் சந்தோஷத்துக்காக சோனியாவுக்கு அட்வைஸ் செய்த மோடி!

By Vishnu PriyaFirst Published Jan 30, 2019, 5:17 PM IST
Highlights

ரபேல் புதிய ஒப்பந்தத்தில் தனது பங்கு எதுவுமில்லை என்றும், முழுக்க முழுக்க அனில் அம்பானி நலனுக்காக பிரதமர் மோடியின் உத்தரவுப்படியே அனைத்தும் நடந்திருப்பதாகவும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் என்னிடம் கூறினார்

* தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வியை காக்க வேண்டும். நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை பாதுகாப்பது அவசியம்: கமல்ஹாசன். 

(நாளைய நம்பிக்கையான மாணவர்களை பாதுகாக்குறதுன்னா எப்டிங்க ஆண்டவா? நீங்க உங்க படத்துல  காதல் காட்சிகள்ள கட்டுப்பாடோடு நடிச்சு, காமமே தெரியாமல் கலவியாடின மாதிரியா?)

* தமிழகம் முழுவதும் கலைஞர் சிலைகள் திறக்கப்படும். மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்: ஸ்டாலின். 
(சிலையா திறக்க போறீங்களா? தல, அடிக்கடி வடநாட்டுக்கு போகாதீங்க, போகாதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா. இப்ப பாருங்க சிலை மேனியா உங்களையும் கவ்விக்கிச்சு)

* பிரதமரின் வருகையை தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை: தினகரன். (ஆமாண்ணே அவரு ஃபிளைட்ல வந்துட்டு,  அதுலேயே போயிட்டாரு. ஒருவேளை டவுன் பஸ்லேயோ, ஆட்டோவுலேயோ வந்திருந்தா மக்கள் கண்டுகினுருப்பாங்க. ச்சே)

* தமிழகத்தில் நீர் வளம் குறைந்து வருகிறது. நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது: மதுரை ஹைகோர்ட் பெஞ்ச். 
(நீதியரசரய்யா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்களே! அப்படின்னா இப்போ இருக்கிற அமைச்சர்கள், எம்.எல்.ஏ. எம்.பி.க்கள், இதே பதவிகளில் இருந்த அனைத்து கட்சி மாஜிக்கள் யாருமே வர்ற தேர்தல்ல ஓட்டு போட முடியாதே!)

* ரபேல் புதிய ஒப்பந்தத்தில் தனது பங்கு எதுவுமில்லை என்றும், முழுக்க முழுக்க அனில் அம்பானி நலனுக்காக பிரதமர் மோடியின் உத்தரவுப்படியே அனைத்தும் நடந்திருப்பதாகவும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் என்னிடம் கூறினார்: ராகுல். (ஆஹா ஆஹா, சுகமில்லாதவரை பார்க்கப்போனா ஹார்லிக்ஸ் வாங்கிட்டு போகணும். ஆனா நீங்க இப்படி பார்த்துட்டு வந்துட்டு சூப் வைக்கிறீங்களே? ஒட்டு மொத்தமா பத்த வெச்சிட்டீங்களே பப்பு?)

* அரசின் பணத்தை செலவு செய்து என் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. மக்கள் பணம் இப்படித்தான் செலவழியவேண்டுமா?: தினகரன். 
(ஆமாமாண்ணே, ஜெயலலிதா முதல்வரா இருக்கச்சே, உங்க சின்னம்மா சிங்கிள் டீ கூட கவர்மெண்டு பணத்துல வாங்கி குடிச்சதில்லை அப்படித்தானே?)

* தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியும், கவலையும் தருகிறது: ராமதாஸ். (மருத்துவர் அய்யா, நீங்க எவ்வளவு ஃபீலிங்ஸ்ல இதை சொல்றீங்க, ஆனா இந்த எதிர்கட்சியாளு...’இவிய்ங்களுக்குதான் தெக்கே ஓட்டு வங்கியே கிடையாதே! பின்னே எதுக்கு கவலைப்படுறாரு?’ன்னு கேக்குறான்.)

* மோடி திறந்திருக்கும் கூட்டணி கதவுக்குள் படி தாண்டிச் செல்ல யாருமே இல்லை: திருநாவுக்கரசர். (தலைவரே நீங்க அங்கேயும் சில வருஷம் வளைய வந்த ஆளுதானே! ஒரு வேளை படி இல்லாம லிஃப்ட் வழியா வருவாய்ங்களோ? எதுக்கும் நாலு தடவை நிதானமா யோசிச்சு சொல்லுங்க.)

* உங்களது நிறைவேறாத லட்சியத்தை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை அவர்களின் போக்கில் சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்: மோடி. (ஏதேது, ராகுலை ஃப்ரீயா விடச் சொல்லி சோனியாவுக்கு அறிவுரை சொல்றா மாதிரி தெரியுதே தல! நெசந்தானா?)

* தனது பதினைந்து நண்பர்களுக்கு அதிகபட்ச வருமான  உத்தரவாதம் தந்தவர்தான் மோடி. மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: ராகுல் காந்தி. 
( ஆமா ப்ரோ உங்க ஆட்சியில, ஷீலா, சுரேஷ் கல்மாதின்னு சில நண்பர்கள் மட்டும் வகையா செழிச்சு, வளமா சம்பாதிச்ச மாதிரிதானே?)

click me!