குட் பை டு பிளாஸ்டிக் பை !! வெல்கம் டு மஞ்சப் பை !! இன்னும் மூன்றே நாட்கள்தான்… நெகிழியை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு உறுதி….

By Selvanayagam PFirst Published Dec 28, 2018, 10:49 AM IST
Highlights

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை தடை செய்துள்ளது. இதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இதை நடைமுறைப்படுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பாக பல இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுக் சூழல் பாதிப்புகள் குறித்து  உலக மக்கள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து பல நாடுகள் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்து வருகின்றன.

இந்நிலையில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரு முயற்சி எடுத்து வருகிறது.

தமிழக அரசின் இந்த தடை உத்தரவுக்கு தடை வழங்கக் கோரி நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதையடுத்து வரும் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்ட்க் தடை உத்தரவு கடுமையாக அமல் படுத்தப்படவுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களிலும் இது குறித்த விழிப்புணர்வை நெட்டிசன்களும் தட்டிவிட்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்த ஹோட்டல்களில் தற்போது வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கறிக்கடைகளிலும் பாத்திரம கொண்டு வந்து கறி வாங்கினால் முட்டை இலவசம் என அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சில கறிக்கடைகளில் பனை ஓலையில் கறி கட்டிக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர்.  இது போன்ற மாற்றங்கள் நிச்சயம் சுற்றுக் சூழலுக்கு ஏற்றதாகவே பார்க்கப்படுகிறது.  பசுமை ஆர்வலர்களும் இதை பெரிதும் வரவேற்கின்றனர்.

வேறு எந்த நிர்பந்தத்துக்கும் அடி பணிந்து  இந்த அரசு பிளாஸ்ட்டிக்குற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ளக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.\

click me!