72 மணிநேரம் கெடு... பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி..!

Published : Mar 05, 2021, 12:37 PM IST
72 மணிநேரம் கெடு... பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி..!

சுருக்கம்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய விளம்பர பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அனைத்தையும் அடுத்த 72 மணிநேரத்துக்குள் அகற்றத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் இம்மாதம் 27ம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெட்ரோல் பங்க்குகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைககளில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதை ஏற்று, நேற்று முன்தினமே மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்க்குகளில் உள்ள விளம்பர பலகைகளில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்றும்படி, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் இருந்து பிரதமர் மோடியின் படங்களை 72 மணிநேரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!