டாய்லெட் கண்டெய்னரை கண்டெல்லாம் பெரியாரிசம் மிரள்கிறது... திமுகவை நக்கலடித்த ஹெச்.ராஜா..!

Published : Apr 22, 2021, 09:26 PM IST
டாய்லெட் கண்டெய்னரை கண்டெல்லாம் பெரியாரிசம் மிரள்கிறது... திமுகவை நக்கலடித்த ஹெச்.ராஜா..!

சுருக்கம்

தேங்காய் நார் கண்டெய்னர், டாய்லெட் கண்டெய்னரை கண்டெல்லாம் மிரண்டு போயிருக்கிறது இந்த பெரியாரிசம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

பாஜக மூத்த தலைவரும் காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான ஹெச்.ராஜா காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்ல முறையில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கமல்ஹாசன் போன்றோர் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை. ஓட்டுப்பதிவு இயந்திரத்தை யாரும் ஹேக் செய்ய முடியாது. அதில் எந்த தில்லுமுல்லும் நடக்க வாய்ப்பில்லை.
அப்படி ஹேக் செய்வதை நிரூபிக்க தேர்தல் ஆணையம் பலமுறை அழைப்பு விடுத்தும் எந்தக் கட்சியும் நிரூபிக்க ஏன் முன்வரவில்லை? மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என்பது ஒரு கால்குலேட்டர் போன்றதுதான். அதில் நெட் இணைப்பு எதுவும் கிடையாது. அப்படி இருக்க செவ்வாய்க் கிரகத்திலேயே ஹெலிகாப்டரை இறக்கும்போது வாக்குபதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாதா என ட்வீட் போடுகிறார்கள். இதையெல்லாம் புரியாமல் செய்வதாகும். தேங்காய் நார் கண்டெய்னர், டாய்லெட் கண்டெய்னரை கண்டெல்லாம் மிரண்டு போயிருக்கிறது இந்த பெரியாரிசம்.


வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்வது என்றால், 2019ஆம் ஆண்டு தேர்தலில்  திமுக கூட்டணி எப்படி 38 தொகுதியில் வெற்றி பெற்றது? நாங்கள் 10 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்கமாட்டோமா? திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 3 இலக்கத்தை தொடாது. அந்தப் பயத்தால்தான் பெண் போலீஸாரின் ஹேண்ட் பேக்கைக்கூட திறந்து பார்க்கிறார்கள். முதல்வர் ஆகும் வாய்ப்பு என்பது ஸ்டாலின் ஜாதகத்திலேயே இல்லை. தமிழக தேர்தலில் திமுக வரவே வராது. அதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தீய சக்தியான திமுக வரக்கூடாது என்பதற்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Assembly Election Results 2026 Live.. தமிழக அரசியலில் கிங் மேக்கராகும் விஜய்..? தனிப்பெரும்பான்மைக்கு ஆப்பு..?
எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!