முதல்வர் எப்படி இவ்வளவு கெத்தாக பேசுகிறார், பிரம்மிப்பில் தொண்டர்கள், மக்கள்

Published : Mar 24, 2021, 08:13 PM IST
முதல்வர் எப்படி இவ்வளவு கெத்தாக பேசுகிறார், பிரம்மிப்பில் தொண்டர்கள், மக்கள்

சுருக்கம்

கடந்த சில நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார், சுட்டெரிக்கும் வெயிலிலும் கூட முதல்வரின் அனல் பறக்கும் பிரச்சார பேச்சை காண மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினை விமர்சனம் செய்யும் விதம் மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.  

ஏற்கனவே பலமுறை முதல்வர் அழைத்தும், ஒரே மேடையில் விவாதம் என்கிற   சவாலுக்கு ஸ்டாலின் வரவில்லை, மாறாக பல்வேறு காரணங்களை கூறி  சவாலை ஏற்க மறுத்து வந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் ஸ்டாலின் மீது நேரடி அட்டாக் மோடை தொடுத்துள்ளார் முதல்வர். வேட்புமனு பதிவு செய்த கையேடு பிரச்சார களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலினை துவம்சம் செய்து வருகிறார்.

திருவண்ணாமலை பிரச்சாரத்தில் பேசிய போது, கருணாநிதி தனது இறுதி காலம் வரை கட்சியை ஸ்டாலினிடம் ஒப்படைக்கவில்லை என்றும், ஸ்டாலினை கருணாநிதியே நம்பவில்லை என்றும், காரணம் அவருக்கு திறமை இல்லை என்றும் ஸ்டாலினை வாரினார் முதல்வர், இப்படி இருக்கும் நிலையில்  தமிழக மக்கள் எப்படி நாட்டை அவரிடம் கொடுப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

சங்கராபுரத்தில் பேசிய முதல்வர், தன்னால் எத்தனை நாட்கள் ஆனாலும் வெயிலில் நின்று பிரச்சாரம் செய்ய முடியும் என்றும், ஆனால் எப்போதும் ஏசியில் இருக்கும்  ஸ்டாலினை இரண்டு நாட்கள் வெயிலில் நிற்க வைத்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடிவிடுவார் என்றும் தெரிவித்தார். இது போன்ற முதல்வரின் அட்டாக் மோட் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வரின் எளிய பேச்சு மற்றும் தன்னம்பிக்கையை மக்கள் ரசிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!