தமிழக மக்களே உஷார்.. நகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!!

Published : Sep 07, 2020, 01:01 PM IST
தமிழக மக்களே உஷார்.. நகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!!

சுருக்கம்

செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்,

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர்,  விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 27  டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி பதிவாக கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பரமக்குடி (ராமநாதபுரம்) 11 சென்டி மீட்டர் மழையும், கீழ் கோதையாறு, (கன்னியாகுமரி) 9 சென்டிமீட்டர் மழையும், கடம்பூர் (தூத்துக்குடி) கயத்தாறு (தூத்துக்குடி) தல 6 சென்டி மீட்டர் மழையும், தேவலா (நீலகிரி) சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 5 சென்டி மீட்டர் மழையும், மதுக்கூர் (தஞ்சாவூர்) கமுதி (ராமநாதபுரம்) வால்பாறை (கோவை) திருவாரூர் கழுகுமலை (தூத்துக்குடி) ஆழியாறு (கோவை) தலா நான்கு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 6 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு இலட்சத் தீவு, பகுதிகளில் சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40- 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

செப்டம்பர் 6 முதல், செப்டம்பர் 8 வரை கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மத்திய கிழக்கு லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 10 ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்  தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 7-9-2020 இரவு 11: 30 மணி வரை கடல் உயர் அலை 3.5 மீட்டர் முதல் 4.8 மீட்டர் வரை இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!