வட தமிழக மாவட்ட மக்களே உஷார்..!! இந்த இந்த இடங்களில் அடித்து நொறுக்கப்போகிறது என எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 23, 2020, 1:22 PM IST
Highlights

வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்,

நேற்று மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும்  சுந்தர்பன் காடுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டு பதிவாக கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 17 சென்டிமீட்டர் மழையும், ராமகிருஷ்ண ராஜ் பேட்டை (திருவள்ளூர்) 13 சென்டிமீட்டர் மழையும், தாமரைபாக்கம் (திருவள்ளூர்) ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தளபதி 11 சென்டிமீட்டர் மழையும்,  திருத்தணி (திருவள்ளூர்) திருத்தணி பிடிஓ (திருவள்ளூர்) தலா 9 சென்டிமீட்டர் மழையும், மதுராந்தகம் (செங்கல்பட்டு) நுங்கம்பாக்கம் (சென்னை) உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) வேம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

நேற்று மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இன்னும் சில மணி நேரங்களில் சாகத்தீவு மற்றும் சுந்தர்பன் காடுகள் இடையே கரையை கடக்கும் என்பதால் அக்டோபர் 23ஆம் தேதி வடக்கு வங்க கடல் பகுதிகளில்  சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

click me!