
நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சசிகலா ஓபிஎஸ் மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.எந்த எம்எல்ஏ யாரை ஆதரிக்கிறார் என்பது தெரியாமல் அவருக்கு வாக்களித்த பொதுமக்களும் குழம்பிப் போயுள்ளனர்
அதேநேரத்தில் வாட்ஸ்அப் மற்றும் முகப்புத்தகம் மூலம் எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளும் பொது மக்கள், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் வாட்ஸ்அப் மூலம் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகினறனர்.
திருப்பூர் வடக்குத் தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் உட்பட 4 எம்எல்ஏக்களும் சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படுகிறது. இந்நிலையில் தொகுதிக்கு வராமல் நட்சத்திர விடுதியில் தங்கள் எம்ல்ஏக்கள் தங்கியிருப்பதை அறிந்த பொது மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இதனால் தங்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் எம்எல்ஏக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
நாங்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்காகத்தான் வாக்களித்தோம், நீங்கள் சசிகலாவை ஆதரிப்பதாக இருந்தால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆதரியுங்கள் என்று கடுமையாக பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ சிறுணியம் பலராமனைக் காணவில்லை என்று அந்த தொகுதியைச் சேர்ந்த சிலர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர்.