தொடர்ந்து பின்னடைவில் இருந்த துணை முதல்வர் சிசோடியா... இறுதியில் தட்டித்தூக்கி அசத்தல்..!

By vinoth kumarFirst Published Feb 11, 2020, 3:42 PM IST
Highlights

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 10 தொகுதியில் இரு கட்சிகளின் வேட்பாளர்களிடம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து, 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 3000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க;-  

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 10 தொகுதியில் இரு கட்சிகளின் வேட்பாளர்களிடம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து, 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளார்.  

இந்நிலையில், பத்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங் நெகியைவிட 2000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடவை சந்தித்து வந்தார். அடுத்தடுத்து சுற்றுகளில் சுதாரித்துக்கொண்ட மணீஷ் சிசோடியா சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் வெற்றியை தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

click me!